முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகிய முக்கிய நடிகர்?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகிய முக்கிய நடிகர்?

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

முல்லை வளைகாப்பிலாவது பிரிந்த குடும்பம் ஒன்று சேருமா என காத்திருக்கிறார்கள் பார்வையாளர்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனாக நடித்து வரும் சரவண விக்ரம் அதிலிருந்து விலகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மூர்த்தி - தனம், ஜீவா - மீனா, கதிர் - முல்லை, கண்ணன் - ஐஸ்வர்யா என நான்கு அண்ணன் தம்பிகளும் பார்வையாளர்களின் கண் படும்படி ஒற்றுமையாக இருந்தனர். தற்போது ஜீவா ஒருபக்கம், கண்ணன் இன்னொரு பக்கம் என வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். முல்லை வளைகாப்பிலாவது பிரிந்த குடும்பம் ஒன்று சேருமா என காத்திருக்கிறார்கள் பார்வையாளர்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனாக நடித்து வருபவர் நடிகர் சரவண விக்ரம். குறும்படங்களில் நடித்து பின்பு சின்னத்தம்பி சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்த இவர், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பியில் கடைசி தம்பியாக நடிக்கிறார். இந்நிலையில் தற்போது அவர் இந்த சீரியலை விட்டு விலகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Saravana Vickram quits Pandian Stores serial, Pandian Stores kannan saravana vickram quitting serial, saravana vickram, Pandian Stores serial, pandian stores serial, pandian stores, pandian stores kathir, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன், சரவண விக்ரம், பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் ஐஸ்வர்யா, saravana vickram age, saravana vickram wiki, saravana vickram instagram, saravana vickram instagram picuki, saravana vickram new movie
நவீனுடன் தீபிகா

காரணம் ஐஸ்வர்யாவாக நடித்து வரும் தீபிகாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் தான். அதில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கார்த்தியாக நடித்து வரும் நவீன் வெற்றியுடன் எடுத்துக் கொண்ட படத்தைப் பகிர்ந்து, ’சுவாரஸ்யமான ஒன்று வரவிருக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே சரவண விக்ரமுக்கு பட வாய்ப்புகள் வந்திருப்பதால், அவர் சீரியலை விட்டு விலகியிருப்பதாகவும், அவருக்கு பதில் இனி நவீன், கண்ணன் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv