தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் ஆடுகளம் முருகதாஸ் நடித்த "ராஜாமகள்" திரைப்படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதன் புதிய தொடக்கங்களைக் குறிக்கும் வகையில், வயகாம் 18 நிறுவனத்தின் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் உன்னதமான அப்பா - மகள் உறவை வெளிப்படுத்தும் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமான ராஜாமகள் திரைப்படத்தை 14 ஏப்ரல் 2023 அன்று, வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நடிகர் ஆடுகளம் முருகதாஸ், பேபி பிரித்திக்ஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உலகளாவிய பந்தத்தை கொண்டாடும் வகையில் உள்ளது.
ஹென்றி ஐ எழுதி இயக்கிய இந்த படத்தில் நடிகை வெலினா மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை மூன்வாக் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது, ஷங்கர் ரங்கராஜன் இசையமைத்துள்ள மெல்லிசை பார்வையாளர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும்.
கிராமப்புற பின்னணியில் அமைக்கப்பட்ட ராஜாமகள், தன் மகள் கண்மணியின் (குழந்தை பிரதிக்ஷா) ஆசையை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்லும் மதியின் (ஆடுகளம் முருகதாஸ்) வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. கண்மணி தன் பள்ளித் தோழியின் பிரமாண்டமான வீட்டின் அழகில் ஈர்க்கப்பட்டு, மதியை (ஆடுகளம் முருகதாஸ்) அதேபோன்ற ஒரு வீட்டை வாங்கும்படி கட்டாயப்படுத்துகிறாள். மகளின் கனவை ஏமாற்ற விரும்பாத மதி, வீடு வாங்கித் தருவதாக உறுதியளிக்கிறார். இறுதியில் மதி தன் மகளுக்கு வீடு வாங்குகிறாரா மற்றும் கண்மணி தன் தந்தையின் கஷ்டங்களையும், வலியையும் புரிந்து கொள்ள அடுத்தடுத்து நிகழும் திருப்பங்கள் பார்வையாளர்களை மேலும் சுவாரஸ்ய மூட்டும்.
இத்திரைப்படத்தை பற்றி இயக்குநர் ஹென்றி ஐ கூறுகையில், ராஜா மகள் திரைப்படத்தின் ஒளிப்பதிவும் இசையும் சொல்ல வேண்டிய கதையை கச்சிதமாக அமைந்து பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தும். தமிழ் குடும்பங்களின் பாரம்பரிய தினமான தமிழ் புத்தாண்டில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் எனது திரைப்படம் ஒளிபரப்பாவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இத்திரைப்படம் நிச்சயமாக பார்வையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.