ராஜா ராணி 2 சீரியலில் இறுதி நாள் படப்பிடிப்பு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியில் ஒளிபரப்பான 'தியா அவுர் பாதி ஹம்' என்ற கதையின் தமிழாக்கமாக ராஜா ராணி சீசன் 2 சீரியல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது. எப்படியாவது ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என கனவுடன் இருந்த நாயகி எதிர்பாராதவிதமாக திருமண பந்தத்தில் நுழைவதும், தன் அம்மாவின் வாக்கே தெய்வ வாக்கு என்று நம்பும் படிப்பறிவில்லாத நாயகன், அதை ஒருபோதும் மீறாமல் குடும்பத்திற்காக ஓயாமல் உழைக்கும்படியான கதைகளத்தை மையப்படுத்தி ராஜா ராணி 2 சீரியல் இயக்கப்பட்டது.
இதில் ஹீரோ சரவணனாக சித்து நடிக்க, ஹீரோயின் சந்தியாவாக நடித்து வந்த ஆல்யா மானசா இரண்டாவது முறை கர்ப்பம் தரித்ததால், அதிலிருந்து விலகினார். பின்னர் ரியா விஸ்வநாதன் அந்த இடத்திற்கு வந்தார். கிட்டத்தட்ட ஓராண்டு கழிந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அவரும் ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகினார். தற்போது ஆஷா கெளடா, சந்தியாவாக நடித்து வருகிறார்.
பார்வதியிடம் கலாட்டா செய்த விக்கியை சிவகாமி கொலை செய்துவிட, அங்கு வரும் சரவணன் அம்மாவை காப்பாற்ற முயல்கிறான். முக்கிய திருப்பமாக இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு சந்தியாவிடம் செல்கிறது. விசாரணை வளையத்துக்குள் சரவணன் வர, நான் தான் விக்கியை கொலை செய்தேன் என அவன் போலீஸில் ஒப்புக் கொள்கிறான். சந்தியா உட்பட குடும்பத்தில் இருக்கும் உண்மை அறியாத பிறர் இதை நம்ப மறுக்கின்றனர்.
View this post on Instagram
உண்மை தெரியக் கூடாது என்பதற்காக சிவகாமியும் தன்னால் முடிந்த அளவு சந்தியா மீது கோபத்தைக் கொட்டுகிறார். இந்நிலையில் உண்மையான குற்றவாளி சிவகாமி என்பதை கண்டறிந்து சந்தியா அவருக்கு தண்டனை வாங்கி தருவார் என்றும், அதோடு சீரியல் முடிவடையும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜா ராணி 2 முடிவுக்கு வருவதற்கு டி.ஆர்.பி இல்லாததும் ஒரு காரணம்.
இந்நிலையில் தற்போது ராஜா ராணி 2 சீரியலின் இறுதி நாள் படப்பிடிப்பு படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.