முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஓடிடி-யில் வெளியாகும் ராகவா லாரன்ஸின் ருத்ரன்!

ஓடிடி-யில் வெளியாகும் ராகவா லாரன்ஸின் ருத்ரன்!

ருத்ரன்

ருத்ரன்

இதில் ராகவா லாரன்ஸ், ஆர். சரத்குமார், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ராகவா லாரன்ஸ், சரத்குமார், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ள ‘ருத்ரன்’ திரைப்படம் மே 14ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில் ராகவா லாரன்ஸ், ஆர். சரத்குமார், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் நாசர், பூர்ணிமா பாக்யராஜ், ஜெயபிரகாஷ், காளி வெங்கட், ஏ.வெங்கடேஷ், இளவரசு, ஹரீஷ் பெரடி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இவர்களுடன் லோஹிதாஸ்வா, ராஜேஷ், ரெடின் கிங்ஸ்லி, ஸ்டன்ட் சிவா, அபிஷேக் வினோத், சிவாஜித், நீலிமா ராணி, சாம்பவி குருமூர்த்தி, ஜார்ஜ் மரியன், மற்றும் எம்.காமராஜ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை கே.பி.திருமாறன் எழுதி, எஸ்.கதிரேசன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை ஆர்.டி.ராஜசேகர் மற்றும் ஆண்டனி ஆகியோர் கையாண்டிருந்தனர்.

OTT பிரீமியர் குறித்து பேசிய இயக்குனர் எஸ் கதிரேசன், "ராகவேந்திரா லாரன்ஸ் போன்ற பெரிய நட்சத்திரத்துடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் ருத்ரன் என்ற கதாபாத்திரம் தனித்துவமான கதாபாத்திரம் அல்ல, அவர் ஒரு சாதாரண பக்கத்து வீட்டு பையன். ஐடி ஊழியராக பணிபுரிகிறார். திடீரென தனது வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்னையை எதிர்கொள்கிறார், இது அவரது வாழ்க்கையை வித்தியாசமாக்குகிறது. OTT பிரீமியர் மூலம், பார்வையாளர்கள் தங்கள் வீட்டுத் திரையில் ருத்ரனைப் பார்த்து, தங்கள் குடும்பத்துடன் ரசிப்பார்கள்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Raghava lawrence