பிரபலமான சீரியலான 'கனா காணும் காலங்கள் 2' பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
சீரியலை சுவாரஸ்யப் படுத்தும் வகையில், தற்போது நடிகை ப்ரீத்தி கிருஷ்ணன் இதில் இணைத்துள்ளனர். மற்ற பிரைம்-டைம் டிவி சீரியல்களை விட டிஆர்பி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்த சீரியலில் அவர் விரைவில் இணைவார் என்று தெரிகிறது.
கனா காணும் காலங்கள் 2 சீரியலில் புதிதாக இணைந்துள்ளது குறித்துப் பேசிய ப்ரீத்தி கிருஷ்ணன், “கனா காணும் காலங்கள் 2 போன்ற அற்புதமான சீரியலில் நான் இடம்பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு இந்த பெரிய வாய்ப்பை வழங்கிய இயக்குனர்கள் ரமேஷ், பாரதி, ஜஸ்வினி, சிவ அரவிந்த், மனோஜ், சிதம்பரம் மணிவன்மன் ஆகியோருக்கு நன்றி. ஸ்வேதா வேடத்தில் நடிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். அரவிந்த் செய்ஜு, ராஜா வெற்றி பிரபு, இர்பான், தேஜா வெங்கடேஷ், தீபிகா வெங்கடாசலம், ஆஷிக் கோபிநாத், பிரணிகா போன்றவர்களுடன் நடிக்க ஆவலாக உள்ளேன். நிச்சயமாக, நான் இந்த சீரியலில் எனது சிறப்பான நடிப்பை வழங்குவேன்” என்றார்.
டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் இந்தத் தொடரை ரமேஷ், பாரதி, ஜஸ்வினி ஜே, சிவ அரவிந்த், மனோஜ் மற்றும் சிதம்பரம் மணிவன்மன் ஆகியோர் எழுதி இயக்கியுள்ளனர். சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை முறையே சதீஷ் குமார், எம். விஜய், ஆனந்த் பிரபு, மற்றும் ஜி.பா வினோத் ஆகியோர் கையாள்கின்றனர்.
இரண்டு குழுவாக பிரிந்த 12வது மாணவர்களைச் சுற்றியே கனா காணும் காலங்கள் 2 கதை நகர்கிறது. மாணவர்களின் அன்றாட நிகழ்வுகள் மிக நுணுக்கமாக இந்தத் தொடரில் சித்தரிக்கப்பட்டுள்ளன. மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி, சண்டை, குடும்ப விவகாரங்கள், ஈகோ, பொறாமை, காதல், நட்பு ஆகியவை கதையில் இடம்பெற்றுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay tv