முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சின்னத்திரை நகைச்சுவை நடிகர் கோவை குணா காலமானார்… ரசிகர்கள் அதிர்ச்சி

சின்னத்திரை நகைச்சுவை நடிகர் கோவை குணா காலமானார்… ரசிகர்கள் அதிர்ச்சி

கோவை குணா

கோவை குணா

சமீபத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் கோவை குணா பங்கேற்றிருந்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சின்னத்திரை நகைச்சுவை நடிகர் கோவை குணா இன்று காலமானார். இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் கோவை குணாவுக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். கவுண்டமணி, சிவாஜி, ராதாரவி உள்ளிட்டோரின் குரல்களை மிமிக்ரி செய்து கோவை குணா ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தார்.

சென்னை காதல் என்ற படத்தில் அவர் நடிகராகவும் இடம்பெற்றிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பான திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்தார் கோவை குணா. சமீபத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் கோவை குணா பங்கேற்றிருந்தார்.

top videos

    இந்நிலையில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று பிரிந்தது. அவரது மறைவு சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: TV show