முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கிழக்கு வாசல் சீரியலில் ஹீரோவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்!

கிழக்கு வாசல் சீரியலில் ஹீரோவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

வெங்கட் ரங்கநாதன் கனா காணும் காலங்கள் (2007) தொடரில் அறிமுகமானார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கிழக்கு வாசல் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவாக நடிக்கும் வெங்கட் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார்.

இது பற்றி பேசிய வெங்கட் ரங்கநாதன், “ராதிகா சரத்குமார் மேம், எஸ்.ஏ.சந்திரசேகர் சார் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். டிவி சீரியலில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமானது. நிச்சயமாக, இந்த சீரியல் ஒவ்வொரு பார்வையாளர்களையும் மகிழ்விக்கும். இதன் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

ராதிகாவின் ராடன் மீடியா தயாரிக்கும் கிழக்கு வாசல் சீரியலில், ராதிகா அம்மா கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். திரைப்படங்களிலும், சீரியல்களிலும் பல மறக்க முடியாத கேரக்டர்களில் நடித்துள்ள அவர், இதிலும் மறக்க முடியாத ஒரு நடிப்பை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க; Today News in Tamil Live | திருமண மண்டபங்களில் மதுவுக்கு அனுமதியில்லை - அமைச்சர் விளக்கம்

வெங்கட் ரங்கநாதன் கனா காணும் காலங்கள் (2007) தொடரில் அறிமுகமானார். பிரபல மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய அவர், தற்போது சின்னத்திரை பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸில் ஜீவா வேடத்தில் நடித்து வருகிறார். அதோடு ஆண் பாவம், மாயா, புகுந்த வீடு, தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே, ரோஜா, தமிழும் சரஸ்வதியும் போன்ற பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Vijay tv