முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வாழ்க்கையில் புதுவரவு..! வெளியான வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வாழ்க்கையில் புதுவரவு..! வெளியான வீடியோ!

சரவண விக்ரம்

சரவண விக்ரம்

தனது குடும்பத்தினருடன் ஷோரூமுக்கு சென்று கார் வாங்கிய அழகிய தருணத்தை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனாக நடித்து வரும் சரவண விக்ரம் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அண்ணன் - தம்பி மற்றும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்திய இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதனை சுருக்கமாக ‘ஆனந்தம்’ படத்தின் சீரியல் வெர்ஷன் எனச் சொல்லலாம்.

இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தனிப்பட்ட முறையில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே சம்பாதித்து வைத்து இருக்கிறார்கள். இவர்களின் சமூக வலைத்தளப்பக்கங்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் ஃபாலோ செய்கின்றனர்.

அந்த வகையில் கடைக்குட்டி தம்பி, கண்ணன் அவ்வப்போது உதிர்க்கும் தனது டைமிங் காமெடியால் பார்வையாளர்களை ஈர்த்துள்ளார். இவர் தன்னுடன் சீரியலில் ஐஸ்வர்யாவாக நடிக்கும் விஜே தீபிகாவுடன் இணைந்து ஷார்ட் பிலிம்கள், ஆல்பம் சாங்குகளிலும் நடித்துள்ளார். அதோடு யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் நடந்த விஜய் டெலி அவார்ட்ஸில் சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டருக்கான விருதைப் பெற்றார் சரவண விக்ரம்.
 
View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)இந்நிலையில் தற்போது புதிய கார் ஒன்றையும் அவர் வாங்கியுள்ளார். தனது குடும்பத்தினருடன் ஷோரூமுக்கு சென்று கார் வாங்கிய அழகிய தருணத்தை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள அவர், “காலம் ஒரு நாளும் உனக்காக மாறாது, காலத்தை நீ மாற்று கரையேறி முன்னேறு. நிமிர்ந்து நில் துணிந்து செல், தொடங்குது உன் யுகம், நினைத்ததை நடத்திடு, நினைப்பு தான் உன் பலம்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Vijay tv