முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சில நிமிடங்களில் உருவான பாடல்.. லைவ்வாக பாட்டு கம்போஸ் செய்த வித்யாசாகர்!

சில நிமிடங்களில் உருவான பாடல்.. லைவ்வாக பாட்டு கம்போஸ் செய்த வித்யாசாகர்!

வித்யாசாகர்

வித்யாசாகர்

சூப்பர் சிங்கர் 9-ல் பின்னணி பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம், பி. உன்னிகிருஷ்ணன், ஸ்வேதா மோகன் மற்றும் பென்னி தயாள் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர், சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். நிகழ்ச்சியின் போது, அவர் உடனடியாக ஒரு பாடலை இசையமைத்து பாடினார். இதைப் பார்த்த அனைத்து போட்டியாளர்களும் நடுவர் மன்ற உறுப்பினர்களும் ஆச்சரியப்பட்டனர். அதோடு அவர்கள் அனைவரும் அவரைப் பாராட்டினர்.

சூப்பர் சிங்கர் சீசன் 9 மற்ற நிகழ்ச்சிகளிலிருந்து வேறுபட்டது. தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் சர்வதேச பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் இதில் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

ஆடிஷன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது திறமையான பாடகர்கள் நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளனர். சூப்பர் சிங்கர் 9-ல் பின்னணி பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம், பி. உன்னிகிருஷ்ணன், ஸ்வேதா மோகன் மற்றும் பென்னி தயாள் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். இந்நிகழ்ச்சி ஆரம்பம் முதல் ஏராளமான அற்புத தருணங்களைக் கண்டுள்ளது. நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு வழிகாட்டும் ஒரு பெரிய ஜூரி குழுவும் இடம்பெற்றுள்ளது.

' isDesktop="true" id="964270" youtubeid="CBZMLCO0JRg" category="television">

சூப்பர் சிங்கர் தமிழ் நிகழ்ச்சி முதன் முதலில் பிப்ரவரி 2007-ல் ஒளிபரப்பானது. பின்னர் இந்நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காலி ஆகிய நான்கு வெவ்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Vijay tv