முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அண்ணா சீரியலில் மிர்ச்சி செந்திலின் கதாபாத்திரம் இதுவா?

அண்ணா சீரியலில் மிர்ச்சி செந்திலின் கதாபாத்திரம் இதுவா?

மிர்ச்சி செந்தில்

மிர்ச்சி செந்தில்

பல வருடங்களுக்குப் பிறகு நடிகை நித்யா ராம் மீண்டும் சீரியலில் நடிக்க வந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மே 22 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு 'அண்ணா' என்ற புதிய தமிழ் சீரியல் ஜீ தமிழ் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

சீரியல் மற்றும் அதன் துவக்கம் குறித்து பேசிய நடிகை நித்யா ராம், "நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நான் சீரியலுக்கு திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சி. அண்ணா சீரியல் ரசிகர்களை மகிழ்விக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இதன் படப்பிடிப்பின் போது நாங்கள் மிகவும் கடினமாக உழைத்தோம். நாங்கள் அதை உருவாக்கும் போது பார்த்ததைப் போலவே, பார்வையாளர்களும் ஆத்மார்த்தமாக பார்ப்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

பல வருடங்களுக்குப் பிறகு நடிகை நித்யா ராம் மீண்டும் சீரியலில் நடிக்க வந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது. இந்த புதிய நிகழ்ச்சியின் தொடக்கத்தை அவரது ரசிகர்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சீரியலில் செந்தில் கபடி வீரராகவும், மளிகை கடை உரிமையாளராகவும் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி அவரின் சட்டை ஏற்கனவே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. எம்.ஜி.ஆரின் புகைப்படம் அடங்கிய சட்டையை அணிந்திருந்த மிர்ச்சி செந்திலின் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதன்படி அந்த நிகழ்ச்சியில் அவர் எம்.ஜி.ஆரின் ரசிகராக நடிக்கிறார் என்று பலரும் யூகித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published:

    Tags: Zee Tamil Tv