ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க .
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சக்தியிடம் ரங்கநாயகி விவாகரத்து பேப்பரில் கையெழுத்து வாங்கிய நிலையில் வெற்றிக்கும் பூஜாவுக்கும் கல்யாணம் செய்ய முடிவெடுக்கிறாள்.
இந்த விஷயமாக ரங்கநாயகியிடம் பேச வரும் சரளா எனக்கும் பூஜாவுக்கும் சம்மதம் ஆனால் எதற்கும் வெற்றியை ஒரு வார்த்தை கேட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்கிறாள். அப்போது வெற்றி அங்கே வர ரங்கநாயகி இந்த கல்யாணத்தில் உனக்கு விருப்பமா என்று கேட்க, சக்தி தன்னிடம் உண்மையை மறைக்கிறாள் என்ற கோபத்தில் வெற்றி பூஜாவை கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கிறான்.
Read More : 'ராஜா ராணி' பட காம்போ.. மீண்டும் களத்தில் இறங்கிய நயன்தாரா..!
இந்த செய்தியை சரண்யா சக்திக்கு தெரியப்படுத்த அவள் மிகவும் வருத்தம் அடைகிறாள். பிறகு சக்தியின் வீட்டு வாசலில் வெற்றி குடித்துவிட்டு வந்து நிற்கிறான். சக்தி ஓடிச்சென்று வெற்றியை கைதாங்களாக அழைத்து வருகிறாள். அப்போது வெற்றி உண்மையை சொல் என்று சக்தியை கேட்கிறான். ஆனாலும் சக்தி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entertainment, Zee tamil