முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / என் மீது உன் கைகளை போடும்போது... ரவீந்தருக்கு மகாலட்சுமியின் ரொமாண்டிக் போஸ்ட்!

என் மீது உன் கைகளை போடும்போது... ரவீந்தருக்கு மகாலட்சுமியின் ரொமாண்டிக் போஸ்ட்!

ரவீந்தர் மகாலட்சுமி

ரவீந்தர் மகாலட்சுமி

மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் சந்திரசேகரன் செப்டம்பர் 2022-ல் திருமணம் செய்து கொண்டனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி, தனது கணவர் இயக்குநரும் தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகரன் குறித்து ரொமாண்டிக்காக பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில், தங்கள் இருவரின் படத்தையும் பதிவிட்டு, ரொமாண்டிக்காக கேப்ஷன் கொடுத்துள்ளார். ”என் மீது உன் கைகளை போடும்போது, இந்த உலகில் என்னால் முடியாதது எதுவுமில்லை என்று எனக்குத் தெரியப்படுத்துகிறாய்.. நான் உன்னை முழு மனதோடும் ஆன்மாவோடும் நேசிக்கிறேன் அம்மு” என அதில் குறிப்பிட்டுள்ளார். அதற்கு “லவ் யூ பொண்டாட்டி” என கமெண்டில் தெரிவித்துள்ளார் ரவீந்தர்.

மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் சந்திரசேகரன் செப்டம்பர் 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பாரம்பரிய இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அன்றிலிருந்து இருவரும் தங்கள் அன்பை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.


வாணி ராணி, ஆபிஸ், செல்லமே, உதிரிப்பூக்கள், ஒரு கை ஓசை போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. நட்புன்னு என்னன்னு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களைத் தயாரித்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை அவர் மணந்தது குறிப்பிடத்தக்கது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial