சமீபத்தில் வெளியான 'டாடா' திரைப்படம் மே 01 ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கலைஞர் டிவி-யில் திரையிடப்படுகிறது.
டாடா படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், வி.டி.வி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபௌஸி, கமல்தீப், அரவிந்த் எழிலரசன், மாஸ்டர் இளன், அர்ஜுனன், மாஸ்டர் ஆரவ் மற்றும் மாஸ்டர் பெடல் சஞ்சய் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை கணேஷ் கே.பாபு எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.
படம் டிவி=யில் ஒளிபரப்பாவது குறித்து இயக்குனர் கணேஷ் கே.பாபு பேசுகையில், "கவினுடன் நான் பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். படத்திற்கு ஆக்ஷன் சார்ந்த வடிவத்தை விட மென்மையான மற்றும் மகிழ்ச்சியான டெம்போவை தேர்வு செய்தோம். கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவரையும் வைத்து படம் இயக்கியது ஒரு உற்சாகமான அனுபவமாக இருந்தது. இருவரும் அருமையான நடிகர்கள். பிரபலமான தமிழ் தொலைக்காட்சி இப்படத்தை ஒளிபரப்புவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் பார்வையாளர்கள் மகிழ்ச்சியுடன் அதை பார்த்து ரசிக்க காத்திருக்கிறோம்" என்றார்.
View this post on Instagram
மணிகண்டன் (கவின்) மற்றும் சிந்து (அபர்ணா தாஸ்) கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் காதலிக்கிறார்கள். சிந்து தற்செயலாக கர்ப்பமாகி, கர்ப்பத்தை கலைக்க மறுக்கிறார். பணப்பிரச்னையுடன் மணியும் சிந்துவும் ஒன்றாக வாழும்போது, அவர்களுக்குள் விரிசல் உருவாகிறது. எதிர்பாராத ஒரு சம்பவத்தால், மணி தனித்த தந்தையாக இருக்க வேண்டிய கட்டாயம். மணியும் சிந்துவும் ஒன்று சேருவார்களா என்பது மீதிக்கதை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Cinema