முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மீண்டும் ஒரு ரியாலிட்டி ஷோ.. கம்பேக் கொடுக்கும் கரு.பழனியப்பன்!

மீண்டும் ஒரு ரியாலிட்டி ஷோ.. கம்பேக் கொடுக்கும் கரு.பழனியப்பன்!

கரு.பழனியப்பன்

கரு.பழனியப்பன்

ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடித்த பார்த்திபன் கனவு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கரு.பழனியப்பன்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது வா தமிழா வா என்ற ரியாலிட்டி ஷோ.

இந்த தனித்துவமான தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளரைத் தேடிக்கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சி மற்றும் அதன் துவக்கம் பற்றி கரு. பழனியப்பன் பேசுகையில், "இந்த விவாத நிகழ்ச்சி அதிக அளவில் பார்வையாளர்களை சென்றடையும் என்று நான் நம்புகிறேன். இந்த (வா தமிழா வா) படப்பிடிப்பின் போது நாங்கள் மிகவும் கடினமாக உழைத்தோம். நாங்கள் பார்த்ததைப் போலவே பார்வையாளர்களும் அதை பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

கரு. பழனியப்பன் சமீபத்தில் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில் இருந்து விலகினார். விவாத நிகழ்ச்சியான 'தமிழா தமிழா' 2018-ஆம் ஆண்டு ஒளிபரப்பானதில் இருந்து, பல சமூகத் தொடர்புடைய தலைப்புகளைப் பற்றி விவாதித்தது. கரு. பழனியப்பன் அந்நிகழ்ச்சியை முதல் அத்தியாயத்திலிருந்தே தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களை அவர் கையாளும் விதத்திற்காக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றார். இப்போது அவர் வா தமிழா வா என்ற புதிய விவாத நிகழ்ச்சி மூலம் தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களை மீண்டும் மகிழ்விக்க வருகிறார். இந்நிகழ்ச்சி கலைஞர் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடித்த பார்த்திபன் கனவு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கரு.பழனியப்பன். இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, 2006-ல் விஷால் நடித்த சிவப்பதிகாரம் படத்தை இயக்கினார். 2008-ல் கரு.பழனியப்பன் இயக்கிய பிரிவோம் சந்திப்போம் திரைப்படம் குடும்ப பார்வையாளர்களிடமிடம் சிறப்பு கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published: