முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தீபாவிடம் அபிராமி வாங்கிய சத்தியம்.. பரபர கட்டத்தில் 'கார்த்திகை தீபம்' சீரியல்!

தீபாவிடம் அபிராமி வாங்கிய சத்தியம்.. பரபர கட்டத்தில் 'கார்த்திகை தீபம்' சீரியல்!

மாதிரிப்படம்..!

மாதிரிப்படம்..!

கார்த்தி போலீஸ் உடன் சேர்ந்து போலி நகையை செய்த இடத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறான். அப்போது மீனாட்சிக்கு போன் செய்து இதற்கு முன்னாடி நகையை வேறு யாராவது பார்த்தார்களா என கேட்க நட்சத்திராவின் அப்பா அம்மா வந்து பார்த்த விஷயத்தை சொல்கிறாள். பிறகு கார்த்திக்கு அவர்கள் மீது சந்தேகம் வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோவிலில் தீபாவை சந்தித்து பேசும் அபிராமி தீபா சொல்லும் காரணங்களையும் ஏற்க மறுத்து கடைசியில் எனக்கு நீ ஒரு சத்தியம் செய்ய வேண்டும் என சொல்கிறாள். அதாவது இனிமேல் கார்த்தியின் பின்னால் வரமாட்டேன், உங்களுக்கு மருமகளாக ஆசைப்பட மாட்டேன் என கற்பூரம் அடித்து சத்தியம் செய்ய சொல்ல வேறு வழியில்லாமல் தீபா சத்தியம் செய்கிறாள்.

அதன் பிறகு அபிராமி அங்கிருந்து நகர மீனாட்சி தீபாவிடம் என்ன சொன்னாங்க என்று கேட்க நடந்ததுக்காக மன்னிப்பு கேட்டாங்க வேற எதுவும் சொல்லவில்லை என உண்மையை மறைக்கிறாள் தீபா. பிறகு மீனாட்சி இவ்வளவு நடந்தது நல்லது தான். நீ எங்க வீட்டு மருமகளாக இப்பவும் வாய்ப்பு இருக்கு, அதுக்கு முயற்சி செய்யலாம் என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறாள்.

மறுபக்கம் கார்த்தி போலீஸ் உடன் சேர்ந்து போலி நகையை செய்த இடத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறான். அப்போது மீனாட்சிக்கு போன் செய்து இதற்கு முன்னாடி நகையை வேறு யாராவது பார்த்தார்களா என கேட்க நட்சத்திராவின் அப்பா அம்மா வந்து பார்த்த விஷயத்தை சொல்கிறாள். பிறகு கார்த்திக்கு அவர்கள் மீது சந்தேகம் வருகிறது.

Read More : நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா? தமிழ் சினிமாவுக்கு ஒரு ஹீரோ! வைரல் போட்டோ!

அதன் பிறகு கார்த்தி உடனடியாக நட்சத்திராவின் டூப்ளிகேட் அப்பா அம்மா வீட்டுக்கு சென்று நட்சத்திராவிற்காக ஒரு செயின் வாங்கலாம்னு இருக்கேன். அவளுக்கு எப்படி பிடிக்கும்னு உங்களுக்குத்தான் தெரியும், அதனால நீங்க கூட வாங்க என சொல்லிக் கூப்பிட டூப்ளிகேட் அம்மா இதை காரணமாக வைத்து நமக்கு ஒரு நகை வாங்கிக் கொள்ளலாம் என திட்டம் போடுகிறாள்.

ஆனால் கார்த்திக் இவர்களை அழைத்துக் கொண்டு நகை கடைக்கு செல்லாமல் டூப்ளிகேட் நகை செய்த இடத்திற்கு கொண்டுவர இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஆனால் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் நகை டிசைனை தேர்வு செய்து கொடுக்க கார்த்திக் இவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறான். அதன்பிறகு இவர்கள்தான் போலி நகையை செய்ய சொன்னதா என விசாரிக்க கொல்லர் இவர்கள் இல்லை என கூறுகிறார். இதனால் கார்த்திக் குழப்பம் அடைகிறான்.

top videos

    அதன் பிறகு வீட்டுக்கு வந்த கார்த்திக் ரூமில் உட்கார்ந்து தீபாவை பற்றி யோசித்து கொண்டு இருக்க அவளுடனான நினைவுகள் அவன் கண் முன் வந்து போகிறது. மறுபக்கம் தீபாவும் கார்த்திக்கை நினைத்து கோவிலில் வருத்தத்தோடு உட்கார்ந்து இருக்கிறாள்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

    First published:

    Tags: Entertainment, Zee tamil