முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / புதிய மைல்கல்லை எட்டிய 'கண்ணெதிரே தோன்றினாள்' சீரியல்!

புதிய மைல்கல்லை எட்டிய 'கண்ணெதிரே தோன்றினாள்' சீரியல்!

கண்ணெதிரே தோன்றினாள் ஸ்வேதா

கண்ணெதிரே தோன்றினாள் ஸ்வேதா

இந்த சீரியலில் மாளவிகா அவினாஷ், ஸ்வேதா கெல்கே, ஜெயஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சுவாரசியமான கதைக்களம் மூலம் தமிழ்த் தொலைக்காட்சி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த ‘கண்ணெதிரே தோன்றினாள்’ சீரியல் 250 அத்தியாயங்களை நிறைவு செய்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக சீரியல் நடிகர்கள் மற்றும் குழுவினர், செட்டில் கேக் வெட்டி கொண்டாடினார்.

சீரியலின் இந்த புதிய மைல்கல்லைப் பற்றிப் பேசிய இயக்குநர் ஆர்.ஆர்.கார்த்திகேயன், "கண்ணெதிரே தோன்றினாள் தொடர் 250 எபிசோட்களைக் கடந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தொடரின் முழுமையான 'பயணம்' என் கேரியருக்கு உயிர் கொடுத்தது" என்றார்.

இது குறித்து பேசிய நடிகை ஸ்வேதா கெல்கே தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார். "இயக்குனர் ஆர்.ஆர்.கார்த்திகேயனுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி, மேலும் கண்ணெதிரே தோன்றினாள் சீரியலின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்" என்றார்.
 
View this post on Instagram

 

A post shared by Kalaignar TV (@kalaignartvofficial)இந்த சீரியலில் மாளவிகா அவினாஷ், ஸ்வேதா கெல்கே, ஜெயஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். மேலும் ஜீவன் ஜி, ரேகா கிருஷ்ணப்பா, கவிதா சோலைராஜா, கோவை பாபு, வைஷு ஜெயச்சந்திரன், தேஜாஸ் கவுடா, ரஞ்சித் கோனேட்டி, சோம் சௌமியன், ஸ்வேதா பி, மதன், ஜீவிதா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial