முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரஞ்சிதமே... விஜய் பாட்டை டைட்டிலாக வைத்து புதிய சீரியல்!

ரஞ்சிதமே... விஜய் பாட்டை டைட்டிலாக வைத்து புதிய சீரியல்!

மனிஷாஜித் - ஷிவ் சதீஷ்

மனிஷாஜித் - ஷிவ் சதீஷ்

ரஞ்சிதமே சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அதில் நடிக்கும் நடிகர் - நடிகைகள் குறித்த விபரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கலைஞர் டிவி-யில் 'ரஞ்சிதமே' என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது.

கண்ணெதிரே தோன்றினால், பொன்னி சி/ஓ ராணி போன்ற பிரபல சீரியல்களை ஒளிபரப்பும் கலைஞர் டிவி, 'ரஞ்சிதமே' சீரியலை ஒளிபரப்ப வெளியாக தயாராகி வருகிறது. இதில் சிவ் சதீஷ் மற்றும் மனிஷாஜித் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இது ரஞ்சித் மற்றும் ரஞ்சனி இருவருக்குமிடையே நடக்கும் மோதலை மையப்படுத்தி இயக்கப்படவுள்ளது.

ரஞ்சிதமே சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அதில் நடிக்கும் நடிகர் - நடிகைகள் குறித்த விபரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரியரைப் பொறுத்தவரை, மனிஷாஜித் ஏற்கனவே உயிரே சீரியலில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதோடு கன்னத்தில் முத்தமிட்டால், உன்னை நினைத்து போன்ற பல்வேறு தொடர்களிலும் நடித்துள்ளார். அதோடு கம்பீரம், நண்பர்கள் கவனத்திற்கு, திறப்பு விழா, கமரக்கட்டு, இணைய தலைமுறை, பிழை, எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாள், கிச்சி கிச்சி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.


இந்த புதிய நிகழ்ச்சியின் தொடக்கத்தை மனிஷாவின் ரசிகர்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், மற்ற தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் பார்வையாளர்களை அதிகளவில் ஈர்க்க தயாராகி வருகின்றனர். அந்த வகையில் வா தமிழா வா, கீழக்கு வாசல், கோலங்கள் 2 போன்ற நிகழ்ச்சிகள் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment, TV Serial