ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலுக்காக மிர்ச்சி செந்தில் கடுமையான விரதம் இருந்து நடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில்.அதன் பிறகு இவர் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்தார். இதனை தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள அண்ணா சீரியலில் சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்த சீரியல் குறித்த ப்ரோமோ வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலுக்காக செந்தில் விரதம் இருந்த விஷயங்கள் பற்றி தெரியவந்துள்ளது. இந்த சீரியலின் முதல் ப்ரோமோ வீடியோவில் செந்தில் உடல் முழுவதும் வேல் குத்தி ஆக்ரோஷமாக சாமியாடியது ரசிகர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. இந்த ப்ரோமோ காட்சியில் நடிப்பதற்காக செந்தில் 1 வாரம் விரதம் இருந்து நடித்துள்ளார்.
Also read... கார்த்தியின் திருமணம் நடக்காது என சித்தர் கொடுத்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் சீரியல்!
அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இந்த சீரியலுக்கான போட்டோஷூட் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டோ ஷூட்டுக்காவும் அவர் மூன்று நாட்கள் விரதம் இருந்துள்ளார். அவர் நிஜ வாழ்க்கையை போல இந்த சீரியலிலும் முருக பக்தர் என்பதால் விரதம் இருந்து சீரியலுக்கான வேலைகளை தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, Zee Tamil Tv