வி.ஜே.மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாரோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்
சின்னத்திரையில் நடிகர்-நடிகைகள் மட்டுமல்லாமல், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து, தங்களுக்கென்ற தனிப்பட்ட ரசிகர் கூட்டத்தை உருவாக்குகின்றனர். அதில் ஒருவர் தொலைக்காட்சித் தொகுப்பாளினி மணிமேகலை. இவருக்கு சமூக வலைதளங்களில் லட்சகணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர்.
காதல் திருமணம் செய்த மணிமேகலை தன் கணவருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இவர்களுக்கு என்று தனியாக ஒரு யூடியூப் சேனலும் உள்ளது. இவர்கள் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கென்றே தனிப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கிறது.
விஜய் டிவி-யின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற மணிமேகலை, சமீபத்திய சீசனில் அதிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அதன் பிறகு தங்களின் ஃபார்ம் ஹவுஸ் கட்டுமான பணிகளில் பிஸியானார்கள் மணிமேகலையும் அவரது கணவர் ஹுசைனும்.
தவிர, கொரோனா லாக்டவுன் நேரத்தில் கிராமம் ஒன்றிற்கு தனது கணவர் உசைனுடன் சென்ற மணிமேகலை, அங்குள்ள நண்பர்களுடன் ஜாலியாக நேரத்தை செலவிட்டு, அந்த வீடியோக்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டார். தற்போதும் அவர்களுடன் தொடர்பில் இருக்கும் மணிமேகலை, அவர்களின் வீடியோக்களையும் தனது சேனலில் பதிவிட்டு வருகிறார்.
இதற்கிடையே மணிமேகலையின் சமீபத்திய வீடியோக்கள் மற்றும் படங்களில் அவர் மிகவும் தளர்வான ஆடைகளை அணிந்துள்ளார். அதோடு தற்போது உடல் சற்று பூசினாற் போலவும் உள்ளது. இதனால் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay tv