முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / புது பயணம்... கிழக்கு வாசல் சீரியலில் இணைந்த நடிகர் தினேஷ்!

புது பயணம்... கிழக்கு வாசல் சீரியலில் இணைந்த நடிகர் தினேஷ்!

தினேஷ் கோபாலசாமி

தினேஷ் கோபாலசாமி

பிரிவோம் சந்திப்போம் சீரியலில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் தினேஷ் கோபால்சாமி, 'பிரிவோம் சந்திப்போம்' சீரியலில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் 'பூவே பூச்சூடவா' தொடரில் நடித்தார். தற்போது வரவிருக்கும் மற்றொரு பிரபலமான சீரியலான கிழக்குவாசல் நடிகர்களுடன் இணைந்துள்ளார்.

சீரியலுக்கு நெருக்கமான ஒருவர் பிரபல ஆங்கில இணையதளத்திடம் பேசுகையில், "தினேஷ் கோபால்சாமி இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். அவர் க்ரே ஷேடில் காணப்படுவார். கேங்ஸ்டர் சிவா வேடத்தில் அவர் நடிக்கிறார்” என்றார்.

சீரியலில் நடிப்பது குறித்து தினேஷ் கோபாலசாமி பேசுகையில், "கிழக்குவாசல் என்ற சூப்பர் ஹிட் சீரியலில் கலந்து கொள்வதில் ஆவலாக உள்ளேன். நீண்ட நாட்களுக்கு பிறகு நேட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதற்கு முன் எனது இரண்டு சீரியல்களிலும் நான் ஒரு பாசிட்டிவ் லீட் ரோலில் நடித்தேன். தற்போது கேங்ஸ்டராக நடிக்க ஆவலாக உள்ளேன், மேலும் எனது நடிப்பை பார்வையாளர்கள் ரசிக்கும் விதத்தில் வழங்கி, அவர்கள் அனைவரையும் மகிழ்விக்க விரும்புகிறேன். எனது புதிய பயணத்தில் அவர்கள் எனக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, 2010-ல் ஒளிபரப்பப்பட்ட 'மஹான்' என்ற தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தினேஷ் கோபாலசாமி அறிமுகமானார். பிரிவோம் சந்திப்போம் சீரியலில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார். புது கவிதை, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, நாச்சியார்புரம், ஈரமான ரோஜாவே 2, கார்த்திகை தீபம் போன்ற பல்வேறு தொடர்களிலும் நடித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published:

    Tags: Vijay tv