முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வானத்தை போல சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை..!

வானத்தை போல சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை..!

தேப்ஜானி

தேப்ஜானி

ராஜீப் சட்டர்ஜி இயக்கிய நாக் அவுட் (2013) என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் தேப்ஜானி.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை தேப்ஜானி மோடக், சன் டிவி-யின் பிரபல சீரியலான ‘வானத்தைப் போல’ தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இந்த விஷயத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து கொண்ட தேப்ஜானி, “என்னை நன்றாக நடத்திய அன்பான குழுவிற்கு நன்றி. என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு சிலரை நான் இங்கு சந்தித்தேன், அவர்கள் என் நலம் விரும்பிகள். ஸ்ரீகுமார், மான்யா ஆனந்த், ஸ்வேதா கெல்கே மற்றும் சாந்தினி பிரகாஷ் ஆகியோருடன் பணிபுரிவதை நிச்சயமாக மிஸ் செய்வேன். ஆனால் நான் உங்களை மீண்டும் சந்திப்பேன். உங்கள் நட்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிஸ் யூ ஆல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீப் சட்டர்ஜி இயக்கிய நாக் அவுட் (2013) என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் தேப்ஜானி. பின்னர், தனது கரியரை தொலைக்காட்சிக்கு மாற்றினார். பெங்காலி சீரியலான அபோன்ஜோன் மூலம் டிவியில் அறிமுகமானார். அதில் அவர் அன்த்ராவாக நடித்தார். அதைத் தொடர்ந்து ராசாத்தி என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் வானத்தை போல தொடரில் சந்தியா வேடத்தில் நடித்தார். இது பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

இதற்கிடையில், தேப்ஜானி மோடக்கிற்கு பதிலாக சந்தியா வேடத்தில் நடிகை காயத்ரியை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published:

    Tags: Sun TV