முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video: அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? வீடியோ வெளியிட்டு உருக்கமாக பேசிய பிக்பாஸ் ரச்சிதா மகாலட்சுமி

Video: அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? வீடியோ வெளியிட்டு உருக்கமாக பேசிய பிக்பாஸ் ரச்சிதா மகாலட்சுமி

ரச்சிதா மகாலட்சுமி

ரச்சிதா மகாலட்சுமி

இந்த வயதான குழந்தைகள் இப்படி கஷ்டப்படுவதைக் கண்டு நான் மிகவும் உடைந்துவிட்டேன், தயவுசெய்து உங்கள் பெற்றோரை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

'பிக் பாஸ் தமிழ் 6' நிகழ்ச்சியின் நட்சத்திரப் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ரச்சிதா, முதியோர் இல்லத்தில் இருந்து உணர்வுப்பூர்வமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

’சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சில மாதங்கள் முன்பு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ரசிகர்களின் ஃபேவரிட் போட்டியாளர்களில் ஒருவரானார். சமீபத்தில் புதிய கார் வாங்கிய ரச்சிதா, அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துக் கொண்டார்.

இந்நிலையில் தற்போது முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ளவர்களுடன் உரையாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த பெரிய குழந்தைகளுடன் செலவழித்த நேரத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. மக்களே.. உங்கள் பெற்றோர் மீது ஏன் இந்த கோபம்? அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? இந்த வயதான குழந்தைகள் இப்படி கஷ்டப்படுவதைக் கண்டு நான் மிகவும் உடைந்துவிட்டேன், தயவுசெய்து உங்கள் பெற்றோரை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.

மேலும் இதுபோன்ற இல்லங்களை நடத்தும் தன்னார்வலர்களுக்கு ஒரு பெரிய சல்யூட். கடவுள் உங்களுக்கு நிச்சயம் ஆசீர்வாதம் தருவார். வயதானவர்களிடம் நல்ல அரவணைப்பும் ஆசிர்வாதமும் இருப்பதை உணர்கிறேன். அவர்களுக்கு சேவை செய்வது புனிதமான பணி" என்று குறிப்பிட்ட ரச்சிதா, முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு உணவு பரிமாறியதோடு, அவர்களுடன் அமர்ந்து உணவை சாப்பிட்டார்.


தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை கடந்த சில வருடங்களுக்கு முன் தனது கணவர் தினேஷை பிரிந்த ரச்சிதா, இப்போதைக்கு மறுமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ளார். ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்த அவர், தற்போது அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Vijay tv