முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இனி பாக்கியலட்சுமி சீரியல் கோபி இவர் தானா? ரசிகர்கள் ரியாக்‌ஷன் இதுதான்!

இனி பாக்கியலட்சுமி சீரியல் கோபி இவர் தானா? ரசிகர்கள் ரியாக்‌ஷன் இதுதான்!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

இன்னும் 10 - 15 எபிசோட்களுடன் தான் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார் கோபியாக நடித்து வரும் சதீஷ்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடித்து வரும் சதீஷ் குமார் விலகுவதாக அறிவித்த நிலையில், அவருக்கு பதில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலட்சுமி, மூத்த மகன் செழியனாக விகாஷ் சம்பத், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன், மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ், இளைய மருமகள் அமிர்தாவாக ரித்திகா தமிழ்செல்வி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு முன்னாள் காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளும் கோபி, நடிப்பில் அசால்ட்டாக ஸ்கோர் செய்து வருகிறார். இதற்கிடையே இன்னும் 10 - 15 எபிசோட்களுடன் தான் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார் கோபியாக நடித்து வரும் சதீஷ். இது பார்வையாளர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் வரும் நாட்களில் கோபியாக நடிகர் பப்லூ பிரித்விராஜ் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் நடித்து வந்த கண்ணான கண்ணே சீரியல் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து அவர் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை அடுத்து ரசிகர்கள் இந்த மாற்றத்தை எந்த அளவுக்கு ஏற்பார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதே வேளையில் பிரித்விராஜும் சிறப்பான நடிகர் என்பதால் கோபி கதாபாத்திரத்துக்கு சரியாக இருப்பார் என்றே பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Vijay tv