முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கல்யாணம்.. கடத்தல்.. ரசிகர்களிடையே ஜாலி அரட்டை அடித்த பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா!

கல்யாணம்.. கடத்தல்.. ரசிகர்களிடையே ஜாலி அரட்டை அடித்த பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா!

ரேஷ்மா

ரேஷ்மா

ரேஷ்மா பசுபுலேட்டி தெலுங்கு தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பாக்கியலட்சுமி மற்றும் பிக் பாஸ் தமிழ் புகழ் ரேஷ்மா பசுப்புலேட்டி இன்ஸ்டாகிராமில் தனது பின்தொடர்பாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். பலவிதமான கேள்விகளுக்கு மத்தியில், ஒரு பின்தொடர்பவர் அவரை "எப்படி கடத்துவது" என்று கேட்டார். அதற்கு, நகைச்சுவையாக விவரங்களை மின்னஞ்சல் செய்கிறேன் என்று கூறினார் ரேஷ்மா.

கோபிக்கு என்ன ஆச்சு, அவர் உண்மையில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறாரா என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, 'கோபி சீரியஸாக விலகினாரா? எனக்குத் தெரியாது, பாக்கியலட்சுமி படப்பிடிப்பின் அடுத்த ஷெட்யூலுக்கு செல்லும் போது கேட்டு சொல்கிறேன்’ என்று பதிலளித்தார் ரேஷ்மா.

இன்னொரு ரசிகர், ரேஷ்மாவை திருமணம் செய்துக் கொள்ள கேட்டார். அதற்கு அவர், "கண்டிப்பா டா, ஆனால் அம்மா என்னை அனுமதிக்க மாட்டார். என்ன செய்வது??" என்றார். ஒரு பெண்ணை நேசிப்பதை எப்படி நிறுத்துவது என்று ஒரு பின்தொடர்பாளர் கேட்டபோது, "ஒருவரை நேசிப்பதை எப்படி நிறுத்துவது என்பதற்கான பதிலை நீங்கள் கண்டறிந்தால், எனக்கும் தெரியப்படுத்துங்கள்! நான் அதைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி கோடிக்கணக்கில் சம்பாதிப்பேன். அதுவரை மன்னிக்கவும் நண்பரே, என்னிடம் பதில் இல்லை" என்றார்.

ரேஷ்மா பசுபுலேட்டி தெலுங்கு தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், அவர் தமிழில் வம்சம் தொடர் மூலம் அறிமுகமானார். ஆண்டாள் அழகர், உயிர்மெய், அன்பே வா, வேலம்மாள் போன்ற பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தற்போது, பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா வேடத்தில் நடிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Vijay tv