முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பொம்மி B.A, B.L சீரியலில் தனது அனுபவத்தை பகிர்ந்த நாயகி அவுரா பட்நகர் படொனி!

பொம்மி B.A, B.L சீரியலில் தனது அனுபவத்தை பகிர்ந்த நாயகி அவுரா பட்நகர் படொனி!

பொம்மி பி.ஏ.பி.எல்

பொம்மி பி.ஏ.பி.எல்

கலர்ஸ் தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொம்மி B.A, B.L சீரியலின் நாயகி அவுரா பட்நகர் படொனி தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கலர்ஸ் தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பொம்மி B.A, B.L. ஏன், எதற்கு, எப்படி என்கிற கேள்விகளை சமூகத்திடம் எழுப்புபவள் பொம்மி. சமூகத்தால் ஒடுக்கப்பட்ட, புறந்தள்ளப்பட்ட கைம்பெண் ஒருத்தி தன் உரிமைகளுக்காக கேள்வி எழுப்புகிறாள். படிக்க வேண்டிய வயதில் திருமணம். விளையாட வேண்டிய வயதில் விதவை பட்டம். காலத்தின் கோலத்தில் கைதியான ஒருத்தி தனக்காக மட்டுமல்ல, தன்னை போல் உரிமைகள் இழந்த அத்தனை பேருக்காகவும் வாதாடுகிறாள். தர்க்க ரீதியான அவள் கேள்விகள், சமூகத்தின் மூடபழக்க வழக்கங்களையும் முட்டாள் தனங்களையும் அசைத்துப் பார்க்கிறது. கேள்வி கேட்பவள் எட்டு வயது சிறுமி. பொம்மி!

சிறார் திருமணம், உடன்கட்டை ஏறுதல், பெண்ணுக்கு மறுமணம் மறுக்கப்படுதல் உள்ளிட்ட பல கொடுமைகள் உச்சகட்டமாய் நடந்தேறிய நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதைதான் பொம்மியின் கதை. பொம்மியின் வாழ்க்கை நம் முன்னோர்கள் பலரின் வாழ்க்கை முறையை நம் கண் முன்னே படம் பிடித்துக் காட்டுகிறது. பொம்மி போன்ற ஒடுக்கப்பட்ட சிறுமிகள் பலர் தங்கள் வாழ்க்கையை பலி கொடுத்தும், தங்கள் வாழ்வின் மூலம் நடத்திய போராட்டங்களின் மூலமும் தான் பெண்களுக்கு எதிரான பல மூட பழக்கவழக்கங்களுக்கு இன்றைய அளவில் தீர்வு கிடைத்திருக்கிறது எனலாம்.

60 வயதான ஒருவரை திருமணம் செய்துகொண்ட 8 வயது சிறுமிக்கு நடக்கும் இரண்டாம் திருமணம் அவள் வாழ்வில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்களே கதை.

இக்கட்டான சூழலில் விதவையென தள்ளப்பட்ட சிறுமியான பொம்மியை திருமணம் செய்துகொள்கிறார் வழக்கறிஞர் அனிருத். சிறு வயதில் இருந்தே முற்போக்கான பார்வை கொண்ட பொம்மி தன்னைப் போலவே படித்துப் பட்டதாரியாக வேண்டும் என நினைக்கும் அனிருத், அவளை வழக்கறிஞராக்குகிறார். தான் பெற்ற கல்வியின் மூலமாக தன்னுடைய வாழ்க்கைத் தரத்தையும் தன்னை போன்ற பெண்களின் வாழ்க்கை உரிமைகளுக்காகவும் பொம்மி போராடிய கதை தான், `பொம்மி B.A, B.L.’

Also read... துவளும் நேரங்களில் தோள் தரும் மாயக் குரல்.. பாடகர் பிரதீப் குமாருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

பெண் என்றால் ஒரு கூட்டுக்குள் ஒடுங்கிய பறவையாக இல்லாமல் அவள் சிறகு விரித்துப் பறக்க வேண்டும், தனக்காக சுய அடையாளத்தைத் தேட வேண்டும் என்பதை உணர்த்தும் கதையே பொம்மியின் கதை.

இந்நிலையில் இந்த சீரியலில் நாயகியாக இருக்கும் அவுரா பட்நகர் படொனியிடம் சில கேள்விகள் எழுப்பப்பட்டது...

கேள்வி: உங்களை பற்றி கூறுங்கள்?

பதில்: வாழ்க்கையை முழுமையாக வாழ இங்கே இருக்கும் ஒரு இளம் பெண்.

கேள்வி: பொம்மி BA, BL தொடரில் பொம்மி கதாபாத்திரம் மூலம் நீங்கள் பெற்ற அனுபவம் என்ன?

பதில்: பொம்மி தொடரில் நடித்தது ஒரு அற்புதமான அனுபவம், இது எனது முதல் வேலை என்றாலும் அதிர்ஷ்டவசமாக எல்லாம் எனக்கு இயல்பாகவே கிடைத்தது. படப்பிடிப்பில் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து மகிழ்ந்தேன்.

கேள்வி: உங்களுடன் வேலை செய்த சக கலைஞர்கள் மற்றும் குழுவினர் பற்றி சொல்லுங்கள்?

பதில்: எனது முதல் வேலையில், அற்புதமான சக கலைஞர்கள் மற்றும் பல அனுபவங்கள் நிறைந்த குழுவினரைப் பெற்றது எனது அதிர்ஷ்டம். என்னுடன் நடித்த சக கலைஞர்களிடம் இருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன்.

கேள்வி: இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நீங்க என்னவெல்லாம் செய்தீர்கள்?

பதில்: பொம்மியின் கேரக்டருக்கு எந்த முயற்சியும் தேவைப்படவில்லை, ஏனென்றால் நான் திரையில் நானாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நான் எனது இயக்குனர் கூறுவதை மிகவும் கவனமாகக் கேட்டு, அதனைப் பின்பற்றுகிறேன்.

கேள்வி: உங்கள் நடிப்பு அறிவையும் திறனையும் எவ்வாறு விரிவுபடுத்த முயற்சிக்கிறீர்கள்?

பதில்: எனது நடிப்பு பயணத்தில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நான் நல்ல திரைப்படங்களைப் பார்க்கிறேன், மனிதர்களை உன்னிப்பாக கவனித்து, வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்கிறேன். எனது திறமையை மெருகேற்ற விரைவில் நடிப்பு பயிற்சியில் சேர விரும்புகிறேன்.

என தனது அனுபவம் குறித்து அவுரா பட்நகர் படொனி தெரிவித்துள்ளார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ்