முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கோபியை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகிய மற்றொரு நடிகர்

கோபியை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகிய மற்றொரு நடிகர்

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியல்

கோபியின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர், தற்போது விலகியிருக்கிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சதீஷை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலை விட்டு இன்னொரு நடிகரும் விலகியிருக்கிறார்.

விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலட்சுமி, மூத்த மகன் செழியனாக விகாஷ் சம்பத், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன், மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ், இளைய மருமகள் அமிர்தாவாக ரித்திகா தமிழ்செல்வி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு முன்னாள் காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளும் கோபி, நடிப்பில் அசால்ட்டாக ஸ்கோர் செய்து வருகிறார். பார்வையாளர்கள் இந்த சீரியலை விடாமல் பார்ப்பதற்கு அவரும் முக்கியக் காரணம். இந்நிலையில் கோபியாக நடித்து வந்த சதீஷ், பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். இது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Another Actor quits Baakiyalakshmi followed by Gopi, Baakiyalakshmi Gopi quits the serial, Baakiyalakshmi serial, Baakiyalakshmi raadhika, vijay tv Baakiyalakshmi serial, Baakiyalakshmi gopi, Baakiyalakshmi reshma, விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல், பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா, பாக்கிய லட்சுமி சீரியல், பாக்கிய லட்சுமி ராதிகா, gopi radhika, vijay tv baakiyalakshmi live streaming hotstar,
பாக்கியலட்சுமி

இதையடுத்து இன்னொரு நடிகரும் பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகியிருக்கிறார். கோபியின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர், தற்போது விலகியிருக்கிறார். அவருக்கு பதில் நடிகர் அரவிந்த் தற்போது அந்த ரோலில் நடிக்கிறார். ‘அவருக்கு பதில் இவர்’ என நேற்றைய எபிசோடில் குறிப்பிட்டு, அரவிந்தின் காட்சி ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Vijay tv