முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கோவிலில் அபிஷேக தண்ணீர் குடத்தை தட்டிவிட்ட பழனி.. 'அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல் அப்டேட்!

கோவிலில் அபிஷேக தண்ணீர் குடத்தை தட்டிவிட்ட பழனி.. 'அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல் அப்டேட்!

மாதிரிப்படம்..!

மாதிரிப்படம்..!

அன்னம் செந்திலிடம் அம்மாவை மன்னிச்சிடுடா என மன்னிப்பு கேட்கிறாள்.மறுபக்கம் பிரின்ஸ்பலிடம் அமுதாவும் மாணிக்கமும் செந்திலுக்காக அவகாசம் கேட்க அவர் முடியாது என மறுத்து பேச அமுதா அவரை ஆங்கிலத்தில் ஒருமையில் பேசுகிறாள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செந்திலின் அப்பா மயங்கி விழப்போன அன்னத்தை தாங்கி அழைத்து செல்கிறார்.

அடுத்து அன்னம் அம்மனுக்கு அபிஷேகம் செய்து தண்ணீரை குடத்தில் பிடிக்கிறாள்.பிறகு அன்னம் குடத்தில் அபிஷேக தண்ணீரை செந்தில் மீது ஊற்றுவதற்காக எடுத்து கொண்டு வர பழனி குடத்தை தட்டி விடுகிறான். இதனால் குடம் உருள அன்னம் அழுது துடிக்கிறாள்.இந்த சமயத்தில் செந்தில் அப்பாவின் கரம் வந்து குடத்தை பிடித்து அந்த தண்ணீரை செந்தில் மீது ஊற்ற அன்னம் சந்தோஷம் அடைகிறாள்.

பிறகு அன்னம் செந்திலிடம் அம்மாவை மன்னிச்சிடுடா என மன்னிப்பு கேட்கிறாள்.மறுபக்கம் பிரின்ஸ்பலிடம் அமுதாவும் மாணிக்கமும் செந்திலுக்காக அவகாசம் கேட்க அவர் முடியாது என மறுத்து பேச அமுதா அவரை ஆங்கிலத்தில் ஒருமையில் பேசுகிறாள்.

Read More : இந்தியன் 2வில் கமலுடன் மீண்டும் இணையும் 'விக்ரம்' பட நடிகர் - மீண்டும் நடக்குமா அந்த மேஜிக்?

மேலும் சட்டப்படி நீங்க செய்வது தவறு என சொல்லி பிரின்சிபல் பற்றிய ரகசியம் ஒன்றை சொல்ல அவர் அதிர்ச்சியில் உறைகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

First published:

Tags: Entertainment, Zee tamil, Zee Tamil Tv