முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஓடிடி-யில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி!

ஓடிடி-யில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி!

சொப்பன சுந்தரி

சொப்பன சுந்தரி

ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பெரிய நட்சத்திரத்துடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என சொப்பன சுந்தரி பட இயக்குனர் பேட்டி.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் லட்சுமி ப்ரியா சந்திரமௌலி நடித்துள்ள ‘சொப்பன சுந்தரி’ திரைப்படம் மே 12ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

இந்த டார்க் காமெடி-டிராமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி மற்றும் தீபா ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, சதீஷ் கிருஷ்ணன், சுனில் ரெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை எஸ்.ஜி சார்லஸ் எழுதி இயக்கியுள்ளார். அஜ்மல் தஹ்சீன் மற்றும் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபாலன் மற்றும் கே.சரத் குமார் ஆகியோர் கவனித்துக் கொண்டனர்.

OTT பிரீமியர் குறித்து பேசிய இயக்குனர் எஸ்.ஜி சார்லஸ், "ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பெரிய நட்சத்திரத்துடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுந்தரி என்ற கேரக்டர் தனித்தன்மை வாய்ந்த கதாபாத்திரம் அல்ல, பக்கத்து வீட்டுப் பெண் கதாபாத்திரம் போன்றது. அந்த கதாபாத்திரம் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய சிக்கலை எதிர்கொள்கிறார், இது அவரது வாழ்க்கையை வித்தியாசமாக மாற்றுகிறது. OTT பிரீமியர் மூலம், பார்வையாளர்கள் சொப்பன சுந்தரியை தங்கள் வீட்டுத் திரையில் பார்த்து, இந்த டார்க் காமெடி படத்தை குடும்பத்துடன் ரசிப்பார்கள்" என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published:

    Tags: Actress Aishwarya Rajesh