நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் சமூக வலைதளங்களில் இருந்து தனக்கு வந்த மோசமான செய்தி மற்றும் படங்கள் குறித்து பகிர்ந்துக் கொண்டார்.
அந்த படங்கள் மற்றும் செய்திகள் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக ஐஸ்வர்யா, தான் இன்னும் கவர்ச்சியாக இருப்பதாகவும், தன்னைப் பற்றி தகாத படங்களை அனுப்பியதாகவும் நெட்டிசன்கள் மீது குற்றம் சாட்டினார்.
ஒரு நபர் தனக்கு நடுஇரவில் செய்தி அனுப்பி, சோப்புகளை தனிப்பட்ட முறையில் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு அழைத்ததையும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா. தொழில் முனைவோராக சோப்புகளை தயார் செய்து விற்பனை செய்து வரும் அவர், தான் சோப்புகளை தான் விற்கிறேன், தன்னை அல்ல என்று கூறினார்.
தவிர, ஐஸ்வர்யா தனது யூடியூப் சேனலில் வீகன் உணவு வகைகள், சோப்பு தயாரித்தல் மற்றும் ஆன்மீகம் பற்றி பதிவிடுகிறார். கோப்பு விற்பனை செய்து வரும் அவர், அதை விளம்பரப்படுத்த தனது சமூக ஊடக தளத்தைப் பயன்படுத்துகிறார். தற்போது நடிப்பு வாய்ப்புகள் இல்லாததால் சோப்பு வியாபாரம் தான் முதன்மை வருமானமாக மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகளான ஐஸ்வர்யா தற்போது தனியே வசித்து வருகிறார். இதையடுத்து பல ஆண்கள் அவருக்கு சமூக ஊடகங்களில் பாலியல் துன்புறுத்தல் செய்திகளை அனுப்பியுள்ளது குரிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Youtube