சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த நடிகை ஷாலு ஷம்மு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர். மேலும் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களிலும் ரீல்ஸ் மூலம் பிரபலம் பெற்றவர்.
கடந்த 9 ஆம் தேதி இரவு ஈஸ்டர் பண்டிகை நாளில் ஷாலு ஷம்மு எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றுள்ளார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு சூளைமேட்டில் நண்பர் வீட்டில் தங்கி உள்ளார். ஏப்ரல் 10ஆம் தேதி காலை எழுந்து பார்த்த போது புதிதாக வாங்கிய அவரது 2 லட்ச ரூபாய் மதிப்புக்கொண்ட IPhone 14 Pro Max காணாமல் போயுள்ளது. அதுகுறித்து ஷாலு ஷம்மு பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், புகாரில் தனது நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் நடிகை ஷாலு ஷம்முவின் வீட்டுக்கு டன்சோவில் ஒரு பார்சல் வந்துள்ளது. அந்த பார்ச்சலில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட ஐபோன் இருந்ததைக்கண்டு ஷாலு ஷம்மு அதிர்ச்சியடைந்தார்.
இந்த நிலையில் நடிகை ஷாலு ஷம்மு சமூக வலைதளத்தில், நான் சந்தேகப்பட்ட நபர் தான் எனது செல்போனை திருடியுள்ளார். எட்டு வருட நட்பு வீணாக போனது என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். ஷாலு சாமுவின் இந்த சமூக வலைதள கருத்தானது சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Shalu Shamu