மும்பையில் நடைபெற்ற நீடா அம்பானி கலாசார மையம் தொடக்க விழாவில் ரஜினிகாந்த், டெண்டுல்கர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்திய கலைகளை வளர்ப்பதற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் கலைஞர்களை அங்கீகரிக்கவும் மும்பையில் பிரம்மாண்டமாக 'நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் தொடங்கப்பட்டுள்ளது. மும்பை பந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ குளோபல் சென்டரில் கலாசரா மையம் அமைந்துள்ளது. 4 அடுக்குகள் கொண்ட கட்டடத்தில், 2000 இருக்கைகள் கொண்ட திரையரங்கம், நவீன ஸ்டுடியோ, கலை நிகழ்ச்சிகளுக்கான அரங்கம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. பிரம்மாண்டமாக நடைபெற்ற இதன் தொடக்கவிழாவில் நீடா அம்பானி நடனம் ஆடி விருந்தினர்களை வரவேற்றார்,
இதனை தொடர்ந்து இசை, ஆடை அலங்கார கண்காட்சி, கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி, அவரது மனைவி ஷோகலா மேதா, ரிலையன்ஸ் ரீட்டைல் தலைவர் இஷா அம்பானி அவரது கணவர் ஆனந்த் பிராமல், ரிலையன்ஸ் எனர்ஜி தலைவர் ஆனந்த் அம்பானி, அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்சென்ட் ஆகியோர் பங்கேற்றனர்
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், திரைத்துறை பிரபலங்கள் ரஜினி காந்த், அமிர் கான், சல்மான் கான், ஆலியா பட், வித்யா பாலன், பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸ், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், சய்ஃப் அலிகான், கரீனா கபூர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய நீடா அம்பானி, இந்தியாவின் சிறந்த விஷயங்களை உலகிற்குக் காண்பிக்கவும் உலகின் சிறந்தவற்றை இந்தியாவுக்கு வரவேற்பதற்கான ஒரு இடமாகவும் கலாசார மையம் இருக்கும் என்றார். விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் கருப்பு டி ஷர்ட் மற்றும் கருப்பு பேன்ட் அணிந்து இளைய மகள் சௌந்தர்யாவுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். குறிப்பாக நிகழ்ச்சியின்போது முகேஷ் அம்பானியின் பக்கத்து இருக்கையில் அமர்ந்து ரஜினிகாந்து ஒட்டுமொத்த நிகழ்ச்சியை கண்டுகளித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajini Kanth