முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கஸ்டடி படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இதோ விமர்சனம்!

கஸ்டடி படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இதோ விமர்சனம்!

கஸ்டடி

கஸ்டடி

Custody movie review | தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கஸ்டடி. தெலுங்கு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கிருத்தி ஷெட்டி, பிரியாமணி, அர்விந்த் சுவாமி, சரத்குமார், ராம்கி, சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு இளையராஜா - யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான கஸ்டடி திரைப்படம் இந்த வாரம் வெளியாகியுள்ளது. அந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கஸ்டடி. தெலுங்கு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கிருத்தி ஷெட்டி, பிரியாமணி, அர்விந்த் சுவாமி, சரத்குமார், ராம்கி, சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு இளையராஜா - யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

கான்ஸ்டபிள் வேலை செய்யும் நாக சைதன்யா, குடும்பம், காதலி என ஜாலியாக இருக்கிறார். ஆனால் காதலியை பல எதிர்ப்புகளை தாண்டி திருமணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதை தடுக்க காதலியின் தந்தைக்கு காவல் நிலையத்தின் எஸ்.ஐ உதவுகிறார். அப்போது, பல கொலைகளை செய்த கொடூர கொலையாளி நாக சைதன்யாவிடம் மாட்டுகிறான். அவனை கொலை செய்ய காவல் துறை அதிகாரிகளே முயற்சிக்கின்றனர். ஆனால் அவனை உயிருடன் பெங்களூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பை நாக சைதன்யா ஏற்கிறார். அதேசமயம் காதலியும் அவனுடன் வந்துவிடுகிறார். அதன்பின் நடக்கும் சம்பவங்களே கஸ்டடி.

இந்தப் படத்தின் கதைகளம் 90 காலகட்டத்தில் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய ஊரில் இருந்து பெங்களூர் நீதி மன்றத்திற்கு ஒரு குற்றவாளியை கொண்டு சென்று சிபிஐயிடம் ஒப்பட்டைக்க வேண்டும் என்ற கான்சப்டை பரபரப்பாக காட்ட வேண்டும் என்று வெங்கட் பிரபு முயற்சித்துள்ளார். அதற்காக பல காட்சிகளையும் திரையில் வடிவமைத்துள்ளார். அதுவும் ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த காவல்துறையும் அவர்களை கொல்ல முயற்சிக்கிறது. ஆனால் அந்த காட்சிகள் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு விறு விறுப்பை உருவாக்கவில்லை.

இதில் வில்லனாக வரும் அர்விந்த் சுவாமி பேசும் வனங்கள் கைதட்டல்களை பெறுகின்றன. அந்த காட்சிகள் வில்லனை ரசிக்க வைத்துவிடுன்றன.

இந்த கதை, நாயகனிடம் இருந்து வில்லன் தப்பித்துவிடுவானா? மாநில காவல்துறையினர் இவர்களை பிடித்துவிடுவார்களா? வில்லனை ஏன் சி.பி.ஐயிடம் உயிருடன் ஒப்படைக்க வேண்டும்? வில்லனை துரத்தும் பிரச்னை என்ன? என்பது போன்ற கேள்விகளை காட்சிகள் பார்வையாளர்கள் மத்தியில் எழுப்பியிருக்க வேண்டும். அதற்காக வாய்ப்புகள் நிறைய இருந்தன. இன்னும் கொஞ்சம் முயற்சித்திருந்தால் நிச்சயம் நடத்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை.

இந்தப் படத்தில் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அவரின் காட்சி ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் என படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.ஆனால் சர்பிரைஸூம் கொடுக்கவில்லை, பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

படத்தில் இடம்பெறும் காட்சிகளுக்கான பின்னணி இசையில் பரபரப்பு உள்ளது. ஆனால் காட்சிகளில் அது இல்லை. வெறும் பில்டப்புகளாகவே கடந்து செல்கின்றன. மேலும் இதுதான் நடக்கப்போகிறது என்பதை சமீபத்தில் படம் பார்க்க தொடங்கியவர்கள் கூட கண்டுபிடிக்கும் வகையிலேயே காட்சிகள் உள்ளன.

Also read... அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் நாயகி யார்? பரிசீலனையில் இருக்கும் 5 நடிகைகள்!

இதில் நடித்த நாக சைதன்யா, கிருத்தி ஷெட்டி, சரத்குமார் என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதுவும் அர்விந்த் சுவாமியின் சில காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறுகின்றன.

கஸ்டடியில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெங்களூர் நீதி மன்றத்திற்கு சென்று கைதான சம்பவத்தை வேறு விதமாக படமாக்க முயற்சித்துள்ளனர். அதிலும் முதலமைச்சராக வரும் பிரியாமணிக்கு (தாட்சாயினி) உதவும் ஐ.ஜி கதாபாத்திரத்திற்கு நட்ராஜ் என பெயர் வைத்துள்ளனர். இது போன்ற விஷயங்கள் படத்திற்கு உதவும் என நினைத்திருக்கிறார்கள். ஆனால் உதவவில்லை.

கஸ்டடி திரைப்படம் வெங்கட் பிரபு Touch உடன் இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் ஆங்காங்கே இருக்கும் சில காட்சிகளே அவரின் Touch-ல் உள்ளன. அது அவரை நம்பி திரையரங்கிற்கு வரும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே. மொத்தத்தில் கஸ்டடி ரசிகர்களுக்கு நஷ்டடி.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Movie review, Venkat Prabhu