முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் கபில்தேவ்..! லால் சலாம் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை வெளியிட்ட ரஜினி!

ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் கபில்தேவ்..! லால் சலாம் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை வெளியிட்ட ரஜினி!

கபில்தேவுடன் ரஜினி

கபில்தேவுடன் ரஜினி

Lal Salaam : ரஜினிகாந்த் லால் சலாம் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பே வெளியிட்டிருந்தனர். மேலும் அந்த திரைப்படத்தின் பூஜையிலும் கலந்து கொண்டார் ரஜினி

  • Last Updated :
  • Chennai, India

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் அவர் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். அவருடைய காட்சிகள் சுமார் 20 நிமிடங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் லால் சலாம் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பே வெளியிட்டிருந்தனர். மேலும் அந்த திரைப்படத்தின் பூஜையிலும் கலந்து கொண்டார் ரஜினிகாந்த். லால் சலாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து தற்போது மும்பையில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளை படமாக்கினர். இந்நிலையில் இன்று கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ரஜினி. அந்த புகைப்படத்தில் லால் சலாம் கெட்டப்பில் ரஜினி இருக்கிறார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஜினி, 'இந்தியாவை முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று பெருமைப்படுத்திய பழம்பெரும், மரியாதைக்குரிய மற்றும் அற்புதமான மனிதர் கபில்தேவ்ஜியுடன் இணைந்து பணியாற்றுவது எனது பாக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து கபில்தேவும் லால்சலாம் படத்தில் நடிக்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் ரஜினியில் லுக் இதுதான் என ரசிகர்கள் ட்ரெண்டு செய்து வருகின்றனர்.

First published:

Tags: Rajinikanth