முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரஜினிகாந்தின் செம லுக்.. லால் சலாம் பட கெட்டப்பை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!

ரஜினிகாந்தின் செம லுக்.. லால் சலாம் பட கெட்டப்பை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!

ரஜினி

ரஜினி

Rajinikanth : நடிகர் ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கம் லால் சலாம் திரைப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்த வருகிறார்.

  • Last Updated :
  • Chennai, India

இந்தியாவிற்கு முதல் உலகக் கோப்பையை பெற்று தந்த கபில் தேவியுடன் நடிப்பது தன கிடைத்த கௌரவம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கம் லால் சலாம் திரைப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்த வருகிறார். குறிப்பாக, மொய்தீன் பாய் என்ற இஸ்லாமிய கதாபாத்திரத்தில் அவர் வருகிறார். அதற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் அந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவிற்கு முதல் உலக கோப்பையை பெற்றுத் தந்த முன்னாள் கேப்டன் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

அவரும் நடிகர் ரஜினிகாந்த்தும் பங்கு பெறும் காட்சிகள் தற்போது படமாக்கப்படுகின்றன. அந்த படப்பிடிப்பு தளத்தில் கபில்தேவ் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரவேற்பு பெற்றது இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மேலும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, இந்தியாவிற்கு முதல் உலகக் கோப்பையை பெற்று தந்து பெருமைப்படுத்திய கபில் தேவ் உடன் இணைந்து பணியாற்றுவது தனக்கு பெருமை மற்றும் கௌரவம் என தெரிவித்துள்ளார்.

லால் சலாம் படத்தில் ரஜினிகாந்தின் காட்சிகள் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் இடம்பெறும் என்று படக்குழு தரப்பில் கூறுகின்றனர்.

First published:

Tags: Rajini Kanth