முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆர்யா

ஆர்யா

ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

  • Last Updated :
  • Chennai, India

ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படம் ஜூன் இரண்டாம் தேதி வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

கொம்பன், மருது, விரும்பன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய முத்தையா தற்போது 'காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில் நடிகர் ஆர்யா நாயகனாக நடித்திருக்கிறார்.  அவருடன் வெந்து தணிந்தது காடு படத்தின் நாயகி சித்தி இதானி நாயகியாக நடித்துள்ளார்.  முத்தையாவின் முந்தைய படங்கள் போலவே இந்த திரைப்படமும் தென்மாவட்ட பின்னணியில் எடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும்  ஆக்ஷன் பின்னணியில்,  குடும்ப செண்டிமெண்ட்டை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.  இதற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி திட்டமிட்டபடி முடிவடைந்தது. அதன் பின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனால் படத்தை ஜூன் இரண்டாம் தேதி வெளியிடுவது என படக் குழுவினர் அறிவித்திருக்கின்றனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பெரும் வெற்றி அடையும் என்பதால், வேறு எந்த திரைப்படத்தையும் வெளியிடாமல் இருந்தனர். ஆனால் பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இதன் காரணமாக தற்போது அடுத்தடுத்த படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த வரிசையிலேயே தற்போது ஆர்யாவின் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதற்கு முன்பு முத்தையா - ஜி.வி. பிரகாஷ் இணைந்த கொம்பன் படம் பெரும் வெற்றியடைந்தது.  அதுவும் அந்த திரைப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

top videos
    First published:

    Tags: Tamil movies