முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரோகினி திரையரங்கு விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் வழக்குப் பதிவு

ரோகினி திரையரங்கு விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் வழக்குப் பதிவு

ரோகினி திரையரங்கு

ரோகினி திரையரங்கு

ரோகினி திரையரங்கம் விவகாரம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் நேற்று பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மக்களை திரையரங்க ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.

பத்து தல படம் பார்ப்பதற்கான டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் மக்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ தமிழக அளவில் வைரலானது. நெட்டிசன்கள் பலரும் ரோகினி திரையரங்க ஊழியரின் செயலுக்கு கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

ரோகினி திரையரங்குக்கு எதிரான ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டானது. மேலும், நரிக்குறவர் மக்களிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘ஏற்கெனவே இதேபோல பல சமயங்களில் திரையரங்குகளுக்குள் அனுமதிக்காமல் இருந்துள்ளனர் என்று அவர்களது வேதனையைப் பதிவு செய்தனர்.

ரோஹினி தியேட்டரின் செயலுக்கு இயக்குநர் வெற்றி மாறன், ப்ரியா பவானி சங்கர், ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

தற்போது, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், ‘டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு தரப்பினரும் ரோகினி திரையரங்கிற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அரசு சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. நரிக்குறவர் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ரோகினி திரையரங்கிற்கு காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ரோகினி தியேட்டர் விவகாரம்- கமல்ஹாசன் கண்டனம்

top videos

    மதுரவாயல் காவல் உதவி ஆணையர் முன்னிலையில் ரோகினி திரையங்கு நிர்வாகிகள் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது தமிழக மனித உரிமைகள் ஆணையமும் நரிக்குறவர் மக்கள் திரையரங்கில் அனுமதிக்கப்படாதது குறித்து தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

    First published: