முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஒரு பக்கம் கோட்சூட்.. மறுபக்கம் வெள்ளை வேட்டி, சட்டை.. புது போஸ்டர்.. மாமன்னன் படத்தின் அப்டேட் இது!

ஒரு பக்கம் கோட்சூட்.. மறுபக்கம் வெள்ளை வேட்டி, சட்டை.. புது போஸ்டர்.. மாமன்னன் படத்தின் அப்டேட் இது!

உதயநிதி

உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்கள் அழுத்தமான கதைகள் கொண்டதாக அமைந்தன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மாமன்னன் படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை அவரின் ரெட்ஜெண்ட் மூவிஸ் நிறுவனமே தயாரிக்கிறது. கீர்த்தி சுரேஷ் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். மாமன்னன் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்கள் அழுத்தமான கதைகள் கொண்டதாக அமைந்தன. அந்த வகையில் மாமன்னன் படமும் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இதில் வடிவேலுவின் கதாபாத்திரம் இதுவரை நாம் பார்த்திடாத வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது மாமன்னன் படத்தின் அப்டேட் புது போஸ்டருடன் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒருபக்கம் கோட்ஷூட்டுடன் உதயநிதியும் மறுபக்கம் அரசியல்வாதி லுக்கில் ஒரு உருவமும் நிற்பதுபோல தெரிகிறது. அதன்படி வரும் 1ம் தேதி மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

top videos
    First published:

    Tags: Udhayanidhi Stalin