முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மாஸாக என்ட்ரி கொடுத்த தேவயானி.. பரபர கட்டத்தில் மாரி சீரியல்!

மாஸாக என்ட்ரி கொடுத்த தேவயானி.. பரபர கட்டத்தில் மாரி சீரியல்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

மாஸாக என்ட்ரி கொடுத்த முத்துபேச்சி, மாரிக்கு ஷாக் கொடுத்த சூர்யா என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சூர்யா ஜாஸ்மின் டீமை வீட்டை விட்டு துரத்திய நிலையில் ஹாசினி இவர்களை பார்த்து ஏளனமாக சிரிக்க பிறகு மாரி சூர்யாவிடம் பேசி வீட்டுக்குள் வர அனுமதி வாங்குகிறாள்.

அதன் பிறகு சமயபுரத்தில் மாரியின் தாத்தா நீலகண்டன் மற்றும் அவளது பெரியம்மா இருக்க அப்போது வரும் ஊர் மக்கள் கோவில் திருவிழாவில் மாரிக்கு முதல் மரியாதை கொடுக்க போவதாக சொல்ல இதை கேட்டு மகிழ்ச்சி அடைகிறார்கள்.

அதற்கு அடுத்ததாக சகுந்தலா வீட்டுக்கு செல்லும் ஊர் பெரியவர்கள் திருவிழா பற்றி பேச வழக்கம் போல முதல் மரியாதை எனக்கு தானே என சொல்ல இந்த முறை மாரிக்கு கொடுக்க வேண்டும் என ஊர் மக்கள் முடிவெடுத்து இருப்பதாக சொல்ல சகுந்தலா அதிர்ச்சி அடைகிறாள்.

அதன் பிறகு அந்த மாரி இந்த ஊருக்குள்ள எப்படி வரானு நானும் பார்க்கிறேன் என சவால் விடுகிறாள். இதையடுத்து மாரியின் பெரியம்மா போன் செய்து உனக்கு முதல் மரியாதை கொடுக்க போறாங்களாம் என சொல்ல மாரி சந்தோஷம் அடைகிறாள்.

மேலும் சூர்யாவையும் திருவிழாவுக்கு கூப்பிட அவன் தாரா அம்மா இல்லாத நேரம் நான் வந்தா தப்பாகிடும், நீ மட்டும் போய்ட்டு வா என சொல்ல மாரி நீங்க வராம நானும் போக மாட்டேன் என சொல்கிறாள். இந்த விஷயம் வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரிய வர அவர்கள் தாரா கிட்ட இதை சொன்னா கூட அவ போக கூடாதுன்னு தான் சொல்லுவா, என்ன செய்வது என யோசிக்கின்றனர்.

Also read... மனோபாலா உடல் தகனம் செய்யப்பட்டது.. இறுதிச்சடங்கில் பங்கேற்ற திரையுலகினர்.!

அதை தொடர்ந்து சகுந்தலா தாராவுக்கு போன் செய்து மாரி மட்டும் இந்த ஊருக்கு வந்தா அவளை நான் ஏதாவது பண்ணிடுவேன் என்று சொல்ல தாரா யோசனையுடன் போனை வைக்கிறாள்.

இறுதியாக முத்து பேச்சியாக தேவயானி மாஸாக ஜீப்பில் வந்து இறங்கி சாமி போட்டோ முன்பு நின்று உன் கோவிலை எப்ப திறக்க போறேன், உனக்கு எப்போ கும்பாபிஷேகம் செய்ய போறேன் என வேண்டுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv