முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கல்யாணம் வேண்டாம் என சொல்லும் தீபா - கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து என்ன?

கல்யாணம் வேண்டாம் என சொல்லும் தீபா - கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து என்ன?

கார்த்திகை தீபம் சீரியல்

கார்த்திகை தீபம் சீரியல்

கல்யாணம் வேண்டாம் என சொல்லும் தீபா, நட்சத்திராவுக்கு பாட்டி கொடுத்த ஷாக் என கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் தீபா வீட்டுக்கு வர அப்போது மைதிலி தலையில் பூவெல்லாம் பார்த்து எங்க போய்ட்டு வர என கேட்க கோவிலுக்கு போய்ட்டு வரேன், என் பிரண்ட் தான் பூ வாங்கி கொடுத்தாள் என சொல்கிறாள். மைதிலி உனக்கு இன்னும் இரண்டு நாளில் கல்யாணம், இப்படி உன் இஷ்டத்துக்கு சுத்திக்கிட்டு இருக்க என திட்டுகிறாள்.

பிறகு தீபா ஓரிடத்தில் உட்கார்ந்து சோகமாக இருக்க அங்கு வரும் ஜானகி என்னாச்சு என கேட்டு கொண்டிருக்க தர்மலிங்கமும் அங்கு வந்து விடுகிறார். தீபா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என சொல்ல இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு ஜானகி அவ அபிராமி வீட்டில் நடந்த விஷயங்களால் இப்படி சொல்றா, கல்யாணம் ஆனால் எல்லாம் சரியாகி விடும் என சொல்லி சமாளிக்கிறாள்.

மறுபக்கம் கார்த்திக் வீட்டில் உறவினர்கள் எல்லோரும் வர தொடங்க கெமிக்கல் மெகந்தியை வாங்கி வைத்திருக்க அதை பார்த்த பாட்டி இயற்கையான மருதாணியை தான் வைக்க வேண்டாம் என சொல்ல அதெல்லாம் இங்கே கிடைக்காது என சொல்கின்றனர்.

பிறகு பாட்டி எங்க கிடைக்கும்னு எனக்கு தெரியும் கார்த்தி நீ வாடா என கார்த்திக்கை கூட்டிக் கொண்டு கிளம்புகிறாள். அப்போது மீனாட்சியிடம் தீபாவுக்கு எங்க கிடைக்கும்னு தெரியும். அங்க தான் போறோம் என சொல்ல அவள் இந்த விஷயத்தை நட்சத்திராவிடம் சொல்லி வெறுப்பேற்றுகிறாள்.

அடுத்ததாக பாட்டி கார்த்தியை கூட்டி கொண்டு தீபா வீட்டுக்கு வந்து அவளிடம் மருதாணி பற்றி கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv