முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கார்த்தியை சந்தித்த ஜானகி.. அபிராமிக்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

கார்த்தியை சந்தித்த ஜானகி.. அபிராமிக்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியல்

கார்த்திகை தீபம் சீரியல்

கார்த்தியை சந்தித்த ஜானகி, அபிராமிக்கு காத்திருந்த அதிர்ச்சி என கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். தீபாவின் கழுத்தில் இருக்கும் தாலியை அவளது அம்மா ஜானகி பார்த்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தீபாவை அழைத்து கொண்டு அவளது அம்மா மண்டபத்துக்கு வருகின்றார். இங்கே கார்த்தி கதிரை தேடி கொண்டிருக்க இதை பார்த்த அருண் ரொம்ப நேரமாக என்ன தேடிகிட்டு இருக்க என கேட்க கார்த்திக் கதிரின் போட்டோவை காட்டி இவனை தான் தேடிகிட்டு இருப்பதாக சொல்ல அருண் இவனை எனக்கு ஏற்கனவே தெரியும். ஒரு முறை இவன் நம்ம கார் முன்னாடி வந்து விழுந்தான், நாங்க தான் ஹாஸ்பிடலில் சேர்த்தோம். இவனுடைய பர்ஸ் மற்றும் செல்போன் என்னிடம் தான் இருக்கு அதை நான் எடுத்து வந்து கொடுக்கறேன் என அருண் வீட்டுக்கு கிளம்ப இதை ஒட்டுக்கேட்ட ஐஸ்வர்யா அவனுக்கு முன்பாக வீட்டிற்கு சென்று அந்த பர்ஸ் மற்றும் போனை எடுத்து மறைத்து விட்டு ஒளிந்து கொள்கிறாள்.

வீட்டிற்கு வந்த அருண் செல்போன் மற்றும் பர்ஸ் கிடைக்காததால் கார்த்திக்கு போன் செய்து விசயத்தை சொல்லி விட்டு மறுபடியும் மண்டபத்திற்கு கிளம்பி வருகிறாள். பிறகு ஐஸ்வர்யா இது குறித்து நக்ஷத்திராவிடம் கேட்க அவன் என்னை ஒன் சைடா காதலிச்சான், இதெல்லாம் கார்த்திக்கும் தெரியும் என சொல்ல கதிர் இதையெல்லாம் ஒட்டு கேட்கிறான்.

அடுத்து மண்டபத்துக்கு வரும் ஜானகியை தீபா வேண்டாம் என தடுத்து நிறுத்த முயற்சி செய்ய அதை கேட்காத ஜானகி கார்த்தியை பார்த்து உங்களிடம் தனியாக பேச வேண்டும் என சொல்லி அழைத்து போக இதை பார்த்த நட்சத்திரா அபிராமியிடம் விசயத்தை சொல்ல கோபப்படும் அபிராமி நேராக கார்த்தியை நோக்கி வருகிறாள்.

இங்கே ஜானகி தயங்கி தயங்கி விசயத்தை சொல்ல போக அங்கு வரும் அபிராமி நீங்க எதுக்கு இங்க வந்தீங்க? என ஜானகியை அவமானப்படுத்தி வெளியே அனுப்ப தீபாவுடன் வீட்டிற்கு வருகிறாள். தீபா சாமி அருகே உக்கார்ந்து வருத்தப்பட்டு கொண்டிருக்க மண்டபத்தில் அபிராமி சோகமாக உக்கார்ந்து இருக்க அங்கு வரும் அருணாச்சலம் இன்னும் தூங்கலையா என கேட்க அபிராமி இந்த கல்யாணம் நடக்குமா என கவலையா இருக்கு என தீபா அடிக்கடி குறுக்கிடும் விசியங்களை சொல்ல அருணாச்சலம் அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்தும் அபிராமி யோசனையில் இருக்கிறாள்.

Also read... ஹேய் ஹேன்ட்சம்... ஹேப்பி பர்த்டே விஜய் தேவரகொண்டா!

மறுநாள் காலையில் மண்டபத்துக்கு வெளியே கட்டி இருந்த வாழை மரம் அறுந்து கீழே விழ சிலர் அபசகுனம் என சொல்ல அபிராமி சித்தர் சொன்ன விசயங்களை நினைத்து இனி இங்கே இருக்க கூடாது என முடிவெடுக்கிறாள்.

அதன் பிறகு கார்த்தியை தவிர மற்ற அனைவரையும் அழைத்து இனிமே நான் இங்க இருக்க மாட்டேன், நான் கிளம்பறேன் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv