முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / குமரேசனின் சூழ்ச்சிகளை உடைக்கும் வக்கீல் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

குமரேசனின் சூழ்ச்சிகளை உடைக்கும் வக்கீல் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

குமரேசனின் சூழ்ச்சிகளை உடைக்கும் வக்கீல், அமுதாவுக்கு தெரியவரும் அதிர்ச்சி உண்மைகள் என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செந்திலின் அப்பாவின் மரணத்திற்கு காரணம் குமரேசன்தான் என தெரிய வந்ததும் அமுதா வக்கீலை சந்திக்க செல்கிறாள்‌.

வக்கீல் செந்தில் படிக்காததற்கு காரணம் அவன் மட்டுமில்லை, அவனை படிக்கா விடாமல் பண்ணியது குமரேசனும், கரஸ்பாண்டண்டும்தான் என சொல்கிறார். செந்தில்தான் அந்த ஸ்கூலுக்கு முதலாளி என சொல்கிறார்.

மேலும் செந்திலின் அப்பாவிற்கு அந்த விஷயம் தெரிந்தவுடன் குமரேசன் பிளான் செய்து அவரை கொன்று விட்ட உண்மையை சொல்கிறார். அடுத்து மாணிக்கம் அமுதாவிடம் இந்த உண்மையை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் என சொல்கிறார்.

உண்மைகளை அறிந்து வீட்டுக்கு வரும் அமுதா அன்னலட்சுமியிடம் செந்திலின் அப்பா இறந்து போனதற்கான பின்னணியை சொல்லாமல் மறைத்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன? குமரேசனுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற அமுதாவின் ஆசை எப்போது நிறைவேறும் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv