முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / செந்திலுக்கு எதிராக பழனி போட்ட திட்டம் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

செந்திலுக்கு எதிராக பழனி போட்ட திட்டம் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

செந்திலுக்கு எதிராக பழனி போட்ட திட்டம், அமுதா வைத்த ட்விஸ்ட் என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வடிவேலு பழனியிடம் செந்தில் பரீட்சை எழுத செல்லப் போவதாக சொல்லி கிளம்ப பழனி எப்படி பரீட்சை எழுதுறான்னு பார்க்குறேன் என ஆட்களை ரெடி செய்து செந்திலை தடுக்க திட்டம் போடுகிறான்.

அடுத்து செந்தில் வண்டியில் வந்து கொண்டிருக்க, குவாலிஸ் வண்டி அவன் முன்னால் வந்து நிற்கிறது..செந்தில் திரும்பி பார்க்க பின்னால் ஒரு கார் வர, இருபுறமும் பைக் அவனை சூழ்ந்தபடி வருகிறது. அப்போது காரில் இருந்து செல்வராஜ் செந்திலிடம் இது எல்லாம் நம்ம ஏற்பாடுதான் என சொல்கிறார்.

“வெறி ஏத்தாதீங்க...“ - அஜித் படத்துக்கு அப்டேட் கேட்கும் ரசிகர்கள்... திருச்சியை திணறடித்த போஸ்டர்கள்..!

மேலும் சைரனை எடுத்து காரின் மேல் வைத்து சைரன் அடித்தபடியே செல்ல வழியில் கயிறை வைத்து வழி மறிக்க வந்த பழனியின் ஆட்கள் தெறித்து ஓடுகின்றனர்.

சைரன் சத்தத்தோடு கார் வர செந்தில் உள்ளே இருந்து இறங்குகிறான். அடுத்து இது எல்லாம் அமுதாவின் ஏற்பாடு என செல்வராஜ் சொல்கிறான். அப்போது அமுதா, அன்னம், மாணிக்கம் வந்து இறங்க, நீங்க எதுக்கு வந்தீங்க என செந்தில் கேட்கிறான். HOD செந்திலிடம் இத்தனை வருஷம் கழிச்சி நீ படிச்சி பரீட்சை எழுத வர்றது சந்தோஷமா இருக்கு, நீ அமுதாவுக்கு தான் நன்றி சொல்லனும் என கூறுகிறார். மேலும் இதுல ஏதாச்சும் ஒண்ணுல பெயிலானா நீ வாழ்க்கைல டிகிரி படிக்கவே முடியாது எனவும் சொல்கிறார்.

அன்னம் அமுதா கிட்ட பேசனும்னா பேசிக்கோப்பா என சொல்ல செந்தில் இன்னொரு முறை நான் ஏமாத்த மாட்டேன் என சொல்ல அமுதா அவன் கையில் முத்தம் கொடுக்கிறாள். இது உனக்கு குடுத்த முத்தம் இல்ல, பரீட்சை எழுத போற உங்க கைக்கு குடுத்த முத்தம் என சொல்கிறாள்.

அடுத்து செந்தில் பரீட்சை எழுத போக அமுதா, அன்னம், மாணிக்கம் என அனைவரும் கடவுளை வேண்டியபடி இருக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv