முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / யாத்திசை படம் ஓடிடியில் ரிலீஸ்... தேதி அறிவித்த படக்குழு..!

யாத்திசை படம் ஓடிடியில் ரிலீஸ்... தேதி அறிவித்த படக்குழு..!

யாத்திசை

யாத்திசை

வரலாற்றுப் புனைவுப் படமான யாத்திசை ஏப்ரல் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சேயோன் ராஜலட்சுமி மற்றும் வைதேகி அமர்நாத் நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வரலாற்றுப் புனைவுத் திரைப்படமான யாத்திசை மே 12ம் தேதி முன்னணி OTT தளமான அமேசான் பிரைமில் வெளியாகிறது.

இத்திரைப்படத்தில் சேயோன் ராஜலட்சுமி மற்றும் வைதேகி அமர்நாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் குரு சோமசுந்தரம், சப்தசீலன், செம்மலர் அன்னம், சந்திரகுமார், சுபத்ரா ராபர்ட், விஜய் சேயோன், சமர் மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்தை எழுதி இயக்கியவர் தரணி ராஜேந்திரன். சக்ரவர்த்தி இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை அகிலேஷ் காத்தமுத்து மற்றும் மகேந்திரன் கணேசன் ஆகியோர் கவனித்துள்ளனர்.

OTT வெளியீட்டைப் பற்றி நடிகை சேயோன் ராஜலஷ்மி, "யாத்திசை நிச்சயமாக பொழுதுபோக்கு மற்றும் அனைத்து வணிக அம்சங்களையும் ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்துடன் கொண்டுள்ளது. OTT மூலம், பார்வையாளர்கள் யாத்திசையை தங்கள் வீட்டு திரையில் பார்த்து, குடும்பத்துடன் ரசிப்பார்கள்” என்றார்.

வரலாற்றுப் புனைவுப் படமான யாத்திசை ஏப்ரல் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் சுமார் 7-10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இன்னும் வெளிவரவில்லை. மேலும், உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் முதல் வாரத்தில் 30 கோடி ரூபாய் வசூலித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published:

    Tags: Amazon Prime