முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / “வெரி டர்ட்டி வில்லன்” - இணையத்தில் கவனம்பெறும் கார்த்தியின் ‘ஜப்பான்’ பட டீசர்!

“வெரி டர்ட்டி வில்லன்” - இணையத்தில் கவனம்பெறும் கார்த்தியின் ‘ஜப்பான்’ பட டீசர்!

ஜப்பான்

ஜப்பான்

Teaser - Who's Japan? Intro Video (Tamil) | உண்மை சம்பவத்தை எடுத்துக்கொண்டு புனைவு திரைக்கதை மூலமாக ஜப்பான் திரைப்படத்தை ராஜூ முருகன் எடுத்து வருகிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

’ஜிப்ஸி’ படத்துக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜப்பான்’. கார்த்தியின் 25-ஆவது படமான இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

உண்மை சம்பவத்தை எடுத்துக்கொண்டு புனைவு திரைக்கதை மூலமாக ஜப்பான் திரைப்படத்தை ராஜூ முருகன் எடுத்து வருகிறார். அதுவும் திருச்சியில் நடந்த ஒரு சம்பவத்தை கதையின் அடிநாதமாக்கி உள்ளார். இந்த நிலையில் நடிகர் கார்த்தியின்  ஜப்பான் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என அறிவித்திருக்கின்றனர்.

Also read... பருத்திவீரன் முதல் பொன்னியின் செல்வன் வரை... நடிகர் கார்த்தியின் ஹிட் பாடல்கள் ஒரு லிஸ்ட்!

நேற்று கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ஜப்பான் படத்தின் அறிமுக டீசரை படக்குழு வெளியிட்டது. அந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

' isDesktop="true" id="992423" youtubeid="NreBfJP5STw" category="cinema">

நன்றி: Dream Warrior Pictures.

First published:

Tags: Tamil Movies Teaser