முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஷால், எஸ்.ஜே.சூர்யா மிரட்டும் மார்க் ஆண்டனி - வெளியானது ட்ரைலர்

விஷால், எஸ்.ஜே.சூர்யா மிரட்டும் மார்க் ஆண்டனி - வெளியானது ட்ரைலர்

விஷால், எஸ்.ஜே.சூர்யா

விஷால், எஸ்.ஜே.சூர்யா

விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தனுஷின் மேலாளராக இருந்த வினோத்குமார் மார்க் ஆண்டனி திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் படத்தின் டீசரை விஜயிடம் பட குழுவினர் காண்பித்தனர். டீசரை பார்த்த நடிகர் விஜய் சிறப்பாக இருப்பதாக பாராட்டினார். அதற்கான புகைப்படங்கள் இன்று காலை வெளியாகின.  இந்த நிலையில் மார்க் ஆண்டனி டீசரை யூட்யூப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

டைம் மிஷின் கான்செப்டில் உருவாகி இருக்கும் அந்த திரைப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் காட்சிகள் டீசரில் இடம் பிடித்திருக்கின்றன. அந்த காட்சிகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

' isDesktop="true" id="957165" youtubeid="bSgwdIfJxqE" category="cinema">

மேலும் டீசரை பார்த்த பல ரசிகர்கள் விஷாலுக்கு மார்க் ஆண்டனி கம் பேக் திரைப்படமாக இருக்கும் எனவும் கூறி வருகின்றனர்.

First published: