முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / என்கிட்ட ரெண்டு கதை இருக்கு... விஜய்யை இயக்கப்போகும் விஷால்? - வைரலாகும் தகவல்

என்கிட்ட ரெண்டு கதை இருக்கு... விஜய்யை இயக்கப்போகும் விஷால்? - வைரலாகும் தகவல்

விஜய்யுடன் விஷால்

விஜய்யுடன் விஷால்

நடிகர் விஜய்யிடம் இயக்க விஷால் தெரிவித்ததாகவும் அதற்கு விஷால் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக நடிகர் விஷால், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் நடிகர் விஜய்யை சந்தித்து மார்க் ஆண்டனி டீசரை காண்பித்துள்ளனர். டீசரைப் பார்த்த விஜய் படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். இதனையடுத்து நடிகர் விஷால் நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை ட்விட்டரில் வெளியிட அவை சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதையும் படிக்க | 39 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக அமைந்த ரஜினியின் படம்

இந்த சந்திப்பின்போது நடிகர் விஷால் விஜய்யிடம் நீண்ட நாட்களாக எனக்கு ஒரு படம் இயக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்ததாகவும், தற்போது துப்பறிவாளன் 2 படத்தை இயக்கிவருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் விஜய்க்காக இரண்டு கதை இருப்பதாகவும் எதிர்காலத்தில் அவரை வைத்து படம் இயக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இதனையடுத்து விஜய்யும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

top videos
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Actor Vishal