முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''அம்மாவாகிட்டேன்'' - குழந்தையை தத்தெடுத்துள்ளதாக அறிவித்த அபிராமி - வைரலாகும் புகைப்படம்

''அம்மாவாகிட்டேன்'' - குழந்தையை தத்தெடுத்துள்ளதாக அறிவித்த அபிராமி - வைரலாகும் புகைப்படம்

அபிராமி

அபிராமி

பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளதாக நடிகை அபிராமி அறிவித்துள்ள நிலையில் அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழில் விருமாண்டி, வானவில், மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அபிராமி. தற்போது சில நேரங்களில் சில மனிதர்கள் பட இயக்குநர் புதிதாக இயக்கியிருக்கும் ஒரு கோடை மர்டர் மிஸ்ட்ரி என்ற இணையத் தொடரில் நடித்திருந்தார்.

பல படங்களில் நடித்திருந்தாலும் கமல் இயக்கி, நடித்த விருமாண்டி படத்தில் இவர் நடித்த அன்னலட்சுமி கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்படுகிறது. இவருக்கும் ராகுல் என்பவருக்கும் கடந்த 2009 ஆண்டு திருமணமானது.

இதையும் படிக்க | ''நடிகர் சங்கம் துருபிடிச்சி கெடக்கு'' - மன்சூர் அலிகான் வேதனை
 
View this post on Instagram

 

A post shared by Abhirami (@abhiramiact)இந்த நிலையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், ''நானும் ராகுலும் கல்கி என்ற பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆகியிருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. எங்கள் மகளை கடந்த வருடம் தத்தெடுத்தோம்.

அது அனைத்து வகையிலும் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. புதிய அம்மாவாக இந்த அன்னையர் தினத்தை கொண்டாடுவதில் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். நானும் எனது குடும்பத்தினரும் உங்களது ஆசிர்வாதத்தை எதிர்நோக்குகிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து  தெரிவித்துவருகின்றனர்.

First published:

Tags: Actress abhirami