முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இவர் வெற்றிமாறன்... ரியல் பொல்லாதவன் - முதன்முறையாக மீடியாவுக்கு அறிமுகப்படுத்திய தனுஷ் - வைரலாகும் பழைய வீடியோ

இவர் வெற்றிமாறன்... ரியல் பொல்லாதவன் - முதன்முறையாக மீடியாவுக்கு அறிமுகப்படுத்திய தனுஷ் - வைரலாகும் பழைய வீடியோ

தனுஷ் - வெற்றிமாறன்

தனுஷ் - வெற்றிமாறன்

பொல்லாதவன் வெளியான நேரத்தில் தனுஷ் முதன்முறையாக இயக்குநர் வெற்றிமாறனை மீடியாவுக்கு அறிமுகப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்துள்ள விடுதலை முதல் பாகம் கடந்த மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. கடந்த வாரம் வெளியான படங்களில் வசூல் ரீதியாக விடுதலை முதல் இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் பெருமாள் வாத்தியார் என்ற முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இளையராஜா இசையில் இந்தப் படம் உருவாகியிருந்தது. ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பாக எல்ரெட் குமார் இந்தப் படத்தை தயாரித்திருந்தார்.

இந்தப் படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, விடுதலை.. இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம் !

சூரியின் நடிப்பு - பிரமிப்பு. இளையராஜா - இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் - தமிழ்த் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து சூரி அவருக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், '' யார பார்த்து பிரமிச்சு சினிமாவுக்கு வரணும்ன்னு நினச்சேனோ அவர் எங்கள் படைப்பையும் உழைப்பையும் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்றேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்குநராக அறிமுகமான பொல்லாதவன் படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெறும் 6 படங்களே வெளியாகியிருக்கின்றன. வெளியான அத்தனை படங்களும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியிலும் வெற்றிப்படமாக அமைந்துள்ளன. அதற்கு அவர் தனது படத்தின் கதைக்கு கொடுக்கும் முக்கியத்துவமே காரணம் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் வெற்றி மாறன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார். அடுத்து இவரது இயக்கத்தில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்கவிருக்கிறார். இதற்கான முன்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்கடுத்து விஜய் நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பொல்லாதவன் வெளியாகும் முன் தனுஷ் முதன்முறையாக இயக்குநர் வெற்றிமாறனை மீடியாவுக்கு அறிமுகப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதில், வெற்றிமாறனை அழைக்கும் தனுஷ், ''இவர் வெற்றிமாறன், என்னுடைய டைரக்டர். ரியல் பொல்லாதவன்'' என்கிறார். பொல்லாதவன் படம் வெளியாகும் முன்பே இயக்குநர் வெற்றிமாறன் மீது தனுஷ் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

First published:

Tags: Actor Dhanush, Director vetrimaran