முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தமிழ் பேச்சு எங்கள் மூச்சு... விஜய் டிவி ப்ரோமோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு... விஜய் டிவி ப்ரோமோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு

’தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்ச்சி விரைவில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இதுகுறித்த ப்ரோமோவும் தற்போது வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் தொலைக்காட்சி விரைவில் ’தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ என்ற நிகழ்ச்சியை தொடங்கவிருக்கிறது. அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர் மூச்சு விஜய் தொலைக்காட்சியின் தமிழ் மொழி போட்டி நிகழ்ச்சியாகும். தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களை அடையாளம் காண்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். 2009-ல் ’தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்ச்சி விஜய் டிவி-யில் ஒளிபரப்பானது. தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இதற்கான தேடலை விஜய் டிவி நடத்தியது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் இந்த பேச்சாளர் தேடல் தொடர்ந்தது. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன், கவிஞர் அறிவுமதி ஆகியோர் போட்டியின் நடுவர்களாகப் பணியாற்றினர்.

' isDesktop="true" id="916014" youtubeid="R3Av-M2Cyts" category="cinema">

இந்நிலையில் தற்போது மீண்டும் ’தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்ச்சி விரைவில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இதுகுறித்த ப்ரோமோவும் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உயிர் திரியில் தமிழ் சுடரை ஏற்றி வைப்போம். எந்நாளும் தமிழோடு நாம் ஒளிர்வோம். தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்று சொல்வோம். தமிழ் பேசி தமிழ் பேசி பெருமைக் கொள்வோம். தமிழ் போல் மொழியில்லை, தமிழின்றி நாமில்லை. தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Vijay tv