கடந்த சில மாதங்களில் பிரபலங்கள் அடுத்தடுத்து மரணமடைந்துவருவது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திவருகிறது. சமீபத்தில் மனோபாலாவின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து ரசிகர்கள் மீண்டுவருவதற்குள் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
80களில் ரஜினி, கமல் ஆகியோர் படங்களில் சிறுவேடங்களில் நடித்துவந்தவர் நடிகை விஜயலட்சுமி. ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது என்ற கமல் படத்தின் மூலம் அறிமுகமான அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட சின்னத்திரை தொடர்களில் விஜயலட்சுமி நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலும் நெகட்டிவ் கேரக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | சின்ன வயசில இவ்வளவு க்யூட்டா? பிரபல நடிகையின் சிறு வயது போட்டோ வைரல்!
கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா சீசன் 1 தொடர்களில் நடித்திருந்தார். பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தாலும் உடல் நல பிரச்னையால் அவர் நடிக்காமல் இருந்துவந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை அவர் மரணமடைந்தார். கடந்த ஓராண்டாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தகாக அவரது மகள் விளக்கமளித்திருக்கிறார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay tv